புளிச்சக் கீரையில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் என பல சத்துக்கள் உள்ளன. புளிச்சக் கீரையினை நாம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.
வாரம் மூன்று முதல் நான்கு நாட்கள் தாராளமாக புளிச்சைக்கீரையை சாப்பிடலாம். உடலுக்கு அவ்வளவு நல்லது. அப்படிப்பட்ட புளிச்சைக்கீரையை வைத்து பருப்பு கடைசல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புளிச்சைக்கீரை
துவரம்பருப்பு
எண்ணெய்
பூண்டு
சீரகம்
வரமிளகாய்
வெங்காயம்
உப்பு
மஞ்சள் தூள்
கடுகு
கருவேப்பிலை
பெருங்காயத்தூள்
செய்முறை
புளிச்சக்கீரை மற்றும் பருப்பு நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பருப்பு 3 மணி நேரம் ஊற வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு வர மிளகாய், பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி அதில் புளிச்சக்கீரை சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் அதை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் பருப்பையும் போட்டு சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு கலந்து விட்டு மூடி வேக வைக்கவும்.
ஆச்சரியம் தரும் கீரை இது! | Amazing Health Benefits of Sorrel Leaves
நன்கு குழைய வேக வேண்டும். பின்னர் அதை மத்து வைத்து நன்கு கடைந்து எடுத்துக் கொள்ளவும். இதை தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை, வரமிளகாய், பூண்டு இடிச்சு போட்டு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அனைத்தும் பொறிந்ததும் அதை அதை பருப்பில் சேர்த்து கலந்து சுடு சாப்பாட்டிற்கு வைத்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் இதை குறைவாக எடுத்து கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“