எலும்பு சம்பந்தப்பட்ட எந்தவிதமான பிரச்சனை என்றாலும், அதை குணமாக்க இந்த எலும்பொட்டி இலையே போதும்.அதிக கால்சியம் சத்துக்களால் நிறைந்து இந்த இலைகளுக்கு, எலும்புகளை ஒன்றிணைக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. இதனால், எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லும்பொட்டி இலைகள் அருமருந்தாக உள்ளதாக டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
முதுகு தண்டு, முதுகு தண்டுவட பாதிப்புகள், கை, கால், இடுப்பு எலும்புகளில் வீக்கங்கள், வலிகள் போன்றவற்றிற்கு இந்த இலையை விழுதாக அரைத்து வைத்து கட்டினால், உடனடியாக தீர்வு கிடைக்கும். இந்த இலையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
டிப்ஸ் 1: இந்த செடியை, சிறு சிறு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக சுண்ட காய்ச்சி, அதனுடைய சாற்றினை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இறுதியில் அந்த சாற்றில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணைய் கலந்து பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
உடைந்த எலும்புகளை ஒட்டும் அதிசயம் இந்த எண்ணெயில் உள்ளதா? bone fracture treatment oil
டிப்ஸ் 2: எண்ணெய் காய்ச்சுவது போல, இந்த இலைகளிலிருந்து சாறு எடுத்தும் பயன்படுத்தலாம். எலும்பொட்டி இலைகளை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு தண்டு காயங்கள், கிழிந்த சவ்வுகள் ஒன்றிணைந்துவிடும். தொண்டையில் தொந்தரவு இருந்தாலும் சரியாகிவிடும். அல்லது இந்த சாற்றினை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இதனால், நெஞ்சு சளி உள்ளிட்ட சுவாச கோளாறுகள் நீங்கும்.
மேலும் இதுமட்டுமின்றி ஆரோக்கியமாகவே எலும்புகள் வலுபெற வேண்டுமானால் கால்சியம் நிறைந்த பால், சீஸ், பிற பால் பொருட்கள், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், ஓக்ரா கீரைகள், சோயா பீன்ஸ், மீன், இறைச்சி உணவுகளை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. ஏன் வாழைப்பழம் கூட சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.