வீட்டில் இருந்தபடியே மருந்து மாத்திரைகள் கூட எடுத்துக் கொள்ளாமல் முதுகுத்தண்டை பலப்படுத்தக்கூடிய வலியை போக்கக்கூடிய ஒரு அருமருந்து பற்றி மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
அதனை எப்படி செய்வது என்று வீரன் வீடு யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பூண்டு
பால்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் ஒரு ஆறு பல் பூண்டு எடுத்து இடித்து கொள்ளவும். இவற்றை அந்தப் பாலில் போட்டு கொதிக்க விடவும்.
முதுகுத் தண்டைப் பலப்படுத்தும்/பூண்டு பால்/
பால் கொதித்து கால் அளவு வரும் வரையிலும் மெதுவாக இவற்றை கொதிக்க விடவும். பின்னர் இதனை அப்படியே குடிக்கலாம். அவ்வளவு தான் முதுகு தண்டு வலியை போக்க கூடிய பூண்டு பால் கசாயம் ரெடியாகிவிடும்.
அதுமட்டுமின்றி பூண்டு பால் குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் குணமாவதோடு, முகத்தில் பருக்கள் வருவதையும் தடுக்க உதவும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தினமும் பூண்டு பால் கொடுத்து வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைகள் தினமும் பூண்டு பால் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் நீங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.