கொய்யா மாங்காய் வெள்ளரி போன்றவற்றை வாங்கி சாப்பிடும் போது அதனோடு காலத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார் இது குறித்த அவர் ஹெல்த் தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மிளகாய் என்பது நம் ஊர் காய் கிடையாது, அது போர்ச்சுகீசியர்கள் வெளிநாட்டில் இருந்து எடுத்து வந்தது என்று சிவராமன் கூறுகிறார்.
மிளகாய் வற்றலில் இருக்கக்கூடிய ஒரு கால் கைடு வயிற்றில் புற்றுநோயை உண்டாக்கலாம் என்கிறார்.
மிளகாய் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது அல்சர் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்.
ஒருவேளை மிளகாய்த் தூளுக்கு சமமாக நாம் மஞ்சள் தூளை பயன்படுத்துவதாலேயே என்னவோ புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகள் வராமல் இருப்பதாகவும் கூறுகிறார்.
எனவே அதிக காரமாக மிளகாய் தூளை பயன்படுத்துபவர்கள் அதை குறைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்துகிறார்.
மிளகாய் அதிகம் சாப்பிட வேண்டாம் | Dr.Sivaraman
அதுமட்டுமின்றி பொதுவாகவே காரம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது..
வயிற்றுப்புண் அல்சர் மூலம் உடல் சூடு போன்ற பிரச்சனைகள் வரும் இது நாளடைவில் நீண்ட நாள் பிரச்சனையாக உருவெடுத்து நம் உடலை பாதிக்கும்.
எனவே காரம் சாப்பிடுவதையும் குறைக்க வேண்டும் வெள்ளரி மாங்காய் போன்றவற்றுடன் சேர்த்து மிளகாய்க் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.