புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். வைட்டமின் சி நிறைந்த பழங்களைச் சாப்பிடலாம்.
Advertisment
பிரபல மருத்துவர் சிவராமன் எலும்பு வலுவாக சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
இங்கே பாருங்க
Advertisment
Advertisements
சில நேரங்களில், மூட்டுத் தேய்மானம், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், எலும்புப்புரை போன்ற பிரச்னைகளாலும் எலும்புகள் பாதிப்படையலாம்.
எனவே எலும்பை வலுவாக்க உணவுப் பழக்கம் மட்டும் போதாது. போதுமான அளவுக்கு உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். ஜிம், நடைபயிற்சி, யோகா என ஏதாவது ஒன்றில் ஈடுபடுவது மிக அவசியம். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின்-டி மற்றும் இரும்புச் சத்து ஆகியவையும் நமக்குத் தேவை.
எனவே இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பதன் வலுவான எலும்பையும், வயதான காலத்தில் ஆரோக்கியத்தையும் நாம் அனுபவிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“