கீரைகளில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை. அந்த அளவுக்கு அற்புதமான நன்மைகள் கீரைகளில் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்கள் கீரைகளில் உள்ளன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்மை அளிக்க கூடிய அனைத்து சத்துக்களும் கீரைகளில் உள்ளன.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினமும் கீரைகள் எடுப்பதால் பெறும் நன்மைகள் உள்ளது என்று மருத்துவர் கெளதமன் கூறுகிறார். நீரிழிவு நோய்க்கு எல்லா வகையான மருத்துவ முறைகளும் ஆய்வுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உணவுமுறை என்னவென்றால் அது நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான்.
அதிலும் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளில் முதன்மையானது கீரைகள் தான். வாரத்தில் ஏழு நாளும் ஏழு வகை கீரைகளை சிறிதளவு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை எப்படி கட்டுக்குள் வரும் என்று பார்க்கலாம்.
1.திங்கள் - முருங்கைகீரை
2. செவ்வாய் - அகத்திகீரை
3. புதன் - கரிசலாங்கண்ணி
4. வியாழன் - பருப்பு கீரை
5. வெள்ளி - கண்டங்கத்திரி கீரை
6. சனி - வெந்தய கீரை
7. ஞாயிறு - பிரண்டை துவையல்
ஏழு கீரைகளையும் ஏழு நாட்களாக தொடர்ந்து 48 நாட்கள் எடுத்து வர உடலிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவிலும் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். கீரை வகைகளை வைத்து சர்க்கரை நோயையும் விரட்ட முடியும். குடல் சார்ந்த ஜீரண மண்டலம் சார்ந்த நோய்களை போக்கவும் ஈரல், பித்தப்பை, கணையம் சார்ந்த உறுப்புகளின் செயல்பாடும் மேம்படும்.
ஆன்ட்டிஆக்சிடென்ட்,மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் சர்க்கரையால் ஏற்படுகின்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட்ட உதவும்.
அதிகம் உணவு உண்ண தூண்டும் பழக்கம் சர்க்கரை நோயாளிகள் பலருக்கு உள்ளது. கீரைகளைத் தொடர்ந்து சாப்பிடும் போது உணவு பழக்கத்தை சமநிலையில் வைத்திருக்கும். மேலும் மலச்சிக்கல் இல்லாமல் இருப்பதற்கும் உதவும்.