ரிச் அன்ட் கிரிமீயான பாதாம் பால் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். சம்மரில் சில்லுன்னு குடிக்க இனி கடைகளில் ஜூஸ் வாங்கி காசு வேஸ்ட் பண்ணாதிங்க. அதுக்கு பதிலாக வீட்டிலேயே இப்படி ட்ரை பன்னுங்கள். சூப்பரான பாதாம் பால் செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
இரவு முழுவதும் ஊறவைத்த பாதாம் - 1/2 கப் பால் குங்குமப்பூ சர்க்கரை - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி ஐஸ் கட்டி
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் சூடான பால் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து தனியாக வைக்கவும். இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை தோலை உரித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை, ஏலக்காய் தூள், காய்ச்சி ஆறவைத்த பால், குங்குமப்பூ பால் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைக்கவும். பரிமாறும் கிளாஸில் சில ஐஸ் கட்டிகளை போட்டு பாதாம் பாலை ஊற்றவும்.
நறுக்கிய பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூ இழைகளால் அலங்கரிக்கவும். பாதாம் பால் பரிமாற தயாராக உள்ளது. வெயிலில் சென்று விட்டு வந்தவர்களுக்கு இதை செய்து தரலாம். குளுகுளு என்று இருக்கும். சுவையை மறக்க மாட்டார்கள்.