சிலருக்கு எந்த உணவு சாப்பிட்டாலும் பீடா போடும் வழக்கம் இருக்கும். ஆனால் உண்மையில் பீடா சாப்பிடுவது நல்லதா? என்று யாருக்கும் தெரியாது.
வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு பீடா சாப்பிட்டால் செரிமானம் ஆகும் என்று பலரும் அதனை வாங்கி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பீடா உடலுக்கு நல்லதா இல்லையா என்று மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கி கூறுகிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, " சாப்பிட் உணவு ஜீரணம் ஆவதற்கு பீடா சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகும். பீடா என்பது வெற்றிலை இலையின் உள்ளே ஸ்வீட் வைத்து தருவது. உண்மையில் அந்த ஸ்வீட் எப்படி செய்யப்படுகிறது என்று தெரியுமா?
பீடாவில் இருக்கும் ஸ்வீட் பெயர் குல்கந்து. அதில் உள்ள ஒரு ஸ்வீட் சாப்பிட்டால் ஆரோக்கிய நன்மைகள் நிறைய என்று பலரும் கூறுவார்கள். மாதவிடாய் கோளாறு, உடல்சோர்வு, ஜீரணத்திற்கு உதவும் என பலர் கூறுவார்கள்.
இந்த உணவு ஜீரணத்தை அதிகரிக்குமா?
ஆனால் உண்மையில் அவை நல்லது இல்லை என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். குல்கந்து தயாரிக்க ரோஜா இதழுடன் நிறைய இனிப்பு சேர்ப்பார்கள். இனிப்புக்கு தேன், சர்க்கரை, பேரிச்சை என இனிப்புக்கு பலவற்றை அதனுடன் சேர்ப்பார்கள். அவை உண்மையில் உடலுக்கு நல்லது இல்லை என்கிறார்.
இவ்வளவு இனிப்பு சுவைகள் நிறைந்த குல்கந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது இல்லை என்றும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிய ஆபத்து" என்றும் அவர் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.