இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை கேன்சர் வியாதி. இதனை கட்டுப்படுத்த இன்னும் மருத்துவ முறைகள் இல்லை என்று கூறப்பட்டாலும் வருமுன் காப்போம் என்பதன் அடிப்படையில் நமக்கு கிராமங்களில் எளிதாக கிடைக்கும் சப்பாத்திக்கள்ளி பழத்தை வைத்து கேன்சர் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.
Advertisment
சப்பாத்திக்கள்ளி பழத்தை பலரும் லிப்ஸ்டிக் பழம் என்று சொல்வார்கள். இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக செயல்படும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை கட்டுப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி பழம், மாரடைப்பை தடுக்கும் சக்தி கொண்டது. இதய துடிப்பையும், இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தத்தின் அளவையும் சீராக வைக்கும். ரத்த குழாயில் வீக்கம் ஏற்படக்கூடிய வாயப்பை தடுக்கும்.
சப்பாத்திக்கள்ளி பழம் அதிகமாக சாப்பிட்டு வரும் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே, இன்ஃபோட்டிலிட்டி ஏற்படக்கூடிய வாய்ப்பு குறைவு. குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுக்கக்கூடிய ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும், சப்பாத்திக்கள்ளி பழம் சாப்பிடும்போது இயற்கையாகவே அந்த பிரச்னை சரியாகிவிடும். ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவு, விந்தணு வீரியம் குறைவு, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையில் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும்.
மேலும் பெண்களுக்கு கர்பப்பபை ஆரோக்கியத்தை பராமரிக்கும். இந்த பழம் சிகப்பாக இருக்க முக்கிய காரணம் இதில் இருக்கும் ஒரு முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துதான். நமது உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தூண்டக்கூடிய ஒவ்வொரு ஃபிரிராரிக்கலையும் எதிர்த்து போராடக்கூடிய, எந்த வகை புற்றுநோயையும் ஏற்படாமல் தடுக்கவும், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு வரக்கூடிய, ப்ராஸ்டிக் கேன்சர் ஏற்படக்கூடிய வாய்ப்பை குறைக்கும்.
Advertisment
Advertisements
சருமம் நன்றாக பிரகாசமாக இருக்க, பளபளவென இருக்க, சப்பாத்திக்கள்ளி உதவுகிறது. இதில் இருக்கும் அதிகமாக ஆக்ஸிஜனேற்ற பண்புகள், உடலில் தோல் மற்றும், அழகை பராமரிக்க உதவுகிறது. இளம் வயதில் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். இளமை தோற்றத்தை நீடிக்க வைக்கும். கண்பார்வை திறனை அதிகப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி பழம், கண்பார்வையை கூர்மையாக்கும் திறன் கொண்டது. நார்ச்சத்து அதிகம் உள்ள முக்கியமான பழங்களில் ஒன்று சப்பாத்திக்கள்ளி. இந்த சத்து உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவுகிறது.
இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல் வாழ் உயரினங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. அஜீரணம் ஏற்படாமல் தடுக்கிறது என்று கூறியுள்ளார்.