குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காலையில் எழுந்தவுடன், முதலில் டீ அல்லது காபி குடிப்பார்கள். இதை குடித்தால் தான் அந்த நாள் தொடக்கம் சரியாக இருக்கும் என்று நினைப்பவர்களும் உண்டு. அதேபோல் காலைக்கடன் முடிப்பதற்கும், டீ அல்லது காபி எதாவது ஒன்றை குடித்தால் தான் போக முடியும் என்ற நிலையில் பலர் உள்ளனர். ஆனால் டீ அல்லது காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று பலரும் சொல்கிறார்கள். இதில் உண்மை என்ன?
Advertisment
டாக்டர் ஷெமிளா வெளியிட்டுள்ள வீடியோவில், டீ காபி குடிப்பது கெட்டது அல்ல ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் குடிக்கலாம் என்று கூறியுள்ளார். டீ அல்லது காபி குடிப்பதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதில் 1 டீ அல்லது காபி ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிப்பது உடலுக்கு ஏற்றதாக இருக்கும். அதை தாண்டி அதிகமாக குடிக்க கூடாது. அதேபோல் வெறும் வயிற்றில், பெட் காபி அல்லது பெட் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாதிரி பெட் டீ அல்லது பெட் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றாலும், இதை ரெகுலராக குடிப்பது ஆபத்து என்று கூறியுள்ளார். பசி எடுக்கும்போது டீ குடித்து பசியை ஆற்ற கூடாது. அதேபோல் வெள்ளை சர்க்கரை சேர்த்து டீ காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அடுத்து மாலை 6 மணிக்கு மேல் டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அப்போது குடித்தால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இரவில் தூக்கம் வருவது கடினம். நீங்கள் குடிக்கும் டீயை மசாலா பாணியில் போட்டு குடிப்பது நல்லது.
Advertisment
Advertisements
நீங்கள் குடிக்கும் டீ அல்லது காபியில், ஏலக்காய், இஞ்சி, பட்டை, உள்ளிட்ட பொருட்களை சேர்த்து போட்டு குடிப்பது நல்லது. மாதத்திற்கு ஒருமுறை டீ காபியுடன், பட்ஜி, போண்டா சாப்பிடுவது தவறில்லை. ஆனால் இதையே வழக்கமாக்கிக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.