தேங்காய் பால் மற்றும் பாதம் பிசின் கலவை மிகவும் நல்லது. இது ஒரு சிறந்த ஆரோக்கிய பானமாக பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், பல உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது உதவுகிறது.
பாதாம் பிசின் இயற்கையாகவே உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது. தேங்காய் பாலும் குளிர்ச்சி தரும் என்பதால், கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு, நீர் கடுப்பு, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க இந்த கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் பாலில் வைட்டமின்கள் (C, E, B காம்ப்ளக்ஸ்), தாதுக்கள் (இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம்) மற்றும் நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
பாதாம் பிசினிலும் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றன. பாதாம் பிசின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காயங்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. இப்படி பல நன்மைகள் அடங்கியுள்ள ந்த தேங்காய் பால் பாதாம் பிசின் வைத்து சுவையான ஜூஸ் எப்படி தயாரிப்பர் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய - அரை மூடி
நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்
பதாம் பிசின் சிறிதளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
முதலில் இரவில் பாதாம் பிசினை ஊறைவைத்து காலையில் அது அதிகமானவுடன் எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காயை துண்டு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கண்ணாடி டம்ப்ளரை எடுத்து அதில் சிறிதளவு பாதாம் பிசினை சேர்த்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் பால், நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி குடிக்கலாம். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.