வாழைக்காய் வறுவல் என்றாலே பலருக்கு ஒரு தனிப் பிரியம் உண்டு. இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எந்த வகை சாதத்தோடும் சேர்த்துச் சாப்பிடலாம். இப்போ, வாழைக்காய் வறுவலை எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 4-5 பல்
புளித் தண்ணீர் - சிறிதளவு
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் இடித்து வைத்த பூண்டு மற்றும் சிறிதளவு புளித் தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த மசாலாக் கலவையை நறுக்கிய வாழைக்காய் துண்டுகள் மீது நன்றாகப் பூசவும். இப்போது, ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, வாழைக்காய் துண்டுகளைப் போட்டு மூடி போட்டு வேக விடவும்.
மூடி போட்டு வேக வைப்பதால், வாழைக்காய் உள்ளே மிருதுவாகவும், மேலே மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காய் இருபுறமும் நன்கு சிவந்து, பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அவ்வளவுதான், சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.