சுவையான ஓட்டல் ஸ்டைல் காலிபிளவர் ப்ரை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
சோளமாவு – 75 கிராம்
மைதா – 75 கிராம்
காஷ்மீர் மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்
சீரகத்தூள் – ½ டீஸ்பூன்
மிளகு தூள் – ¼ டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – ¼ டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
காலிஃப்ளவர் – 400 கிராம்
கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சில்லி பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 100 மில்லி லிட்டர்
செய்முறை:
ஒரு மிக்ஸிங் பவுள் எடுத்து, அதில் சோளமாவு, மைதா மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
அதன்பிறகு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கி ஒரு பேஸ்ட் போல் எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு, காலிஃபிளவரை துண்டு துண்டுகளாக நறுக்கி அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுக்கவும். 3 நிமிடங்கள் இதை வெந்நீரில் வைத்து எடுத்தால் அதில் இருக்கும் பூச்சி புழுக்கள் நீங்கிவிடும்.
அதன்பிறகு இதனை எடுத்து, பேஸ்டாக கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காலிஃபிளவரை பொறித்து எடுக்க வேண்டும்.
அதன்பிறகு ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில், எணணெய் ஏற்றி, மிளகாய் பேஸ்ட், தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
2 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் செய்துவிட்டு, சாஸ் கலவை சூடு ஆறியதும், தயிரை அதில் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக கலக்கி, பொறித்து எடுத்து வைத்துள்ள காலிஃபிளவர் பக்கோடாவில் சேர்த்தால் சுவையான ப்ரை ரெடி.