உங்கள் மதிய உணவுப் பெட்டியில் இந்த ரெசிபியை எடுத்துச் சென்றால், உங்கள் நண்பர்கள் நிச்சயம் மிச்சம் வைக்க மாட்டார்கள். உருளைக்கிழங்கு சிக்கன் செய்வது எப்படி பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - வேகவைத்து, வெட்டியது
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
சிக்கன் - 200 கிராம்
கரம் மசாலா - அரை டேபிள்ஸ்பூன்
வடித்த சாதம் - 1 கிளாஸ்
கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது, வேகவைத்து வெட்டிய உருளைக்கிழங்கைச் சேர்த்து, சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து, 5 பல் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பிறகு, ஒரு பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, 2 பச்சை மிளகாய், 4 தக்காளி, 1 டேபிள்ஸ்பூன் கல்லுப்பு சேர்த்து நன்கு கலந்து, தக்காளி குழையும் வரை சமைக்கவும். இப்போது, 200 கிராம் சிக்கனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள், அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். கடாயை மூடி போட்டு, 5 நிமிடங்கள் வேகவிடவும். ஒரு கிளாஸ் வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
முன்பு வதக்கி வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான்! ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு சிக்கன் சாதம் தயார். இதை நிச்சயம் செய்து பாருங்கள்.