இன்றைய காலக்கட்டத்தில் அசைவம் என்று எடுத்துக்கொணடால் அதில் சிக்கனுக்கு முதல் இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் கடைசிகள் பல வெரைட்டிகளில் கிடைக்கிறது. ஆனால் சிக்கன் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரெபியை செய்துகொடுங்கள். அதுதான் உருளைக்கிழங்கு பட்டாணி பிரியாணி. எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய், லவங்கப்பட்டை, பிரியாணி இலைகள், கிராம்பு
வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா,
உருளைக்கிழங்கு,
தக்காளி, பச்சை பட்டாணி,
மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா
கெட்டி தயிர்,
கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு,
பாசுமதி அரிசி
செய்முறை:
ஒரு குக்கரில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடாக்கவும். அதனுடன், ஏலக்காய், லவங்கப்பட்டை, பிரியாணி இலைகள், கிராம்பு மற்றும் இரண்டு துண்டுகளாக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிய பின், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஒரு கைப்பிடி புதினா இலைகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தோல் நீக்கிய சிறிய உருளைக்கிழங்குகளை அல்லது துண்டுகளாக்கப்பட்ட சாதாரண உருளைக்கிழங்கை (பச்சையாக) சில நொடிகள் வதக்கவும். இதனுடன், இரண்டு தக்காளி கூழ் மற்றும் கால் கப் புதிய பச்சை பட்டாணியைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
https://www.instagram.com/reel/DLcOavXxT-Q/?utm_source=ig_web_copy_link
இப்பொழுது, ஒன்றரை டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தூள் (கொத்தமல்லி இலைகள் அல்ல), ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். கால் கப் கெட்டியான தயிர் சேர்த்து, நன்றாகக் கலந்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
கடைசியாக, ஒன்றரை கப் தண்ணீர், சிறிதளவு கொத்தமல்லி இலைகள் மற்றும் பாதி எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு கப் ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, அதிக தீயில் இரண்டு விசில் வரும் வரை சமைக்கவும். இறுதியாக 2 விசில் விட்டு எடுத்தால் பிரியாணி ரெடி. ட்ரை பண்ணி பாருங்க.