பொதுவாக கோடை காலங்களில் ஆங்காங்கே சாலை ஓரங்களில், கரும்பு ஜூஸ் கடை இருக்கும், சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் வெயில் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த மாதிரி ஜூஸ் வாங்கி குடிப்பது வழக்கம். கரும்பு ஜூஸ் எடுப்பதற்கு முக்கியமாக கரும்பு தேவை. ஆனாலும் வீ்ட்டில் இருந்தபடியே கரும்பே இல்லாமல், அதே டேஸ்டில் கரும்பு ஜூஸ் செய்யலாம். எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்:
வெல்லம் – 1 கப்
புதினா – சிறிதளவு
எலுமிச்சை – ஒரு பழம்
இஞ்சி ஒரு துண்டு,
உப்பு தேவையான அளவு
ஐஸ்கட்டி – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வெல்லம், புதினா, எலுமிச்சை சாறு, இஞ்சி உப்பு மற்றும் ஐஸ்கட்டியை சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு இந்த கலவையை வடிகட்டி, ஒரு கண்ணாடி டம்ளரில், ஐஸ்கட்டி சேர்த்து இந்த கலவையை ஊற்றி கொடுத்தால் கரும்பு ஜூஸ் டேஸ்டில் இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.