இந்த ஒன்-பாட் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள். இது நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். இதை குக்கரில் சமைத்தால், ஒரே ஒரு விசில் வைத்து எடுத்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம்
கொஞ்சமாக இஞ்சி பூண்டு
ஐந்து அல்லது ஆறு பச்சை மிளகாய்
ஒரு கப் கொத்தமல்லி
அரை கப் புதினா
கால் கப் தண்ணீர்
செய்முறை:
இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் சேர்த்து, நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, பிரியாணி ஸ்பைசஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரே ஒரு ஜாதிபத்திரி சேர்க்கவும். சின்ன சைஸ் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின்னர், மீடியம் சைஸ் தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.
தக்காளி குழைந்ததும், நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, மூடி வைத்து விடுங்கள். பேஸ்ட்டின் பச்சை வாசனை நீங்கி, சற்று அடர் பச்சை நிறமாக மாறும். அந்த நேரத்தில் நான் பிரான் சேர்த்திருக்கிறேன். நீங்கள் இந்த நேரத்தில் காய்கறிகள் சேர்க்கலாம். ஊறவைத்த சீரக சம்பா அரிசியை 1:2 என்ற விகிதத்தில் (1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர்) சேர்த்து, கால் டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு, இரண்டு டீஸ்பூன் உப்பு சேர்த்து மூடி வைத்து எடுத்தால், அட்டகாசமான ஒன்-பாட் ரெசிபி தயார்!