அனிதா புஷ்பவனம் குப்புசாமி ஸ்டைலில், மொச்சை புளிக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, சீரகம் – 2 டீஸ்பூன்
Advertisment
Advertisements
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கட்டி பெருங்காயம் – ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – ஒரு கட்டி
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
தக்காளி – 2
மஞ்சள், மிளகாய், சாம்பார் தூள் – தலா 1 டீஸ்பூன்
கத்தரிக்காய் – 200 கிராம்
மொச்சை பயறு – 200 கிராம்
புளி – 100 கிராம்
செய்முறை:
முதலில் மொச்சை பயறை தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து ஒரு வாணலியில், எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு, கட்டி பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பிறகு மிக்ஸியில் அரைத்த தக்காளி சேர்க்கவும்.
அதன்பிறகு சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். இறுதியாக ஊறவைத்த மொச்சை பயறு சேர்த்து நன்றாக வேக வைத்து, இறுதியாக புளி ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான மொச்சை புளிக்குழம்பு தயார்.