குழந்தைகளுக்கு வயிற்றில் புழு தொல்லையா? மிளகுடன் இந்த கீரை சேர்த்து சாப்பிடுங்க; டாக்டர் ஜெயரூபா
குழந்தைகள் மண்ணில் விளையாடும்போதோ, அல்லது மலம கழித்துவிட்டு சரியாக கையை கழுவவில்லை என்றாலோ விரல் இடுக்குகளில் தங்கும் தொற்றுகள் உணவின் மூலமாக வயிற்றுக்கு சென்றுவிடும்.
குழந்தைகள் மண்ணில் விளையாடும்போதோ, அல்லது மலம கழித்துவிட்டு சரியாக கையை கழுவவில்லை என்றாலோ விரல் இடுக்குகளில் தங்கும் தொற்றுகள் உணவின் மூலமாக வயிற்றுக்கு சென்றுவிடும்.
பொதுவாக குழந்தைகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்னை வயிற்றில் புழுக்கள் இருப்பது. இப்படி இருந்தால் அவர்கள் உடம்பில் அரிப்புகள் வருவது, எப்போதும் சோர்சவாக இருப்பது, ஆசனவாய் பகுதியில் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பார்கள். இந்த பிரச்னைக்கு டாக்டர் ஜெயரூபா தீர்வு கூறியுள்ளார்.
Advertisment
மண்ணில் விளையாடுவது, மலத்தில் மூலமாக குழந்தைகளில் விரல் இடுக்குகளில் இந்த கிருமித்தொற்றுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. வீட்டில் சமையல் செய்யும்போது கூட அது முறையாக இல்லை என்றால், இந்த மாதிரியான பிரச்னைகள் வரும். குழந்தைகள் மண்ணில் விளையாடும்போதோ, அல்லது மலம கழித்துவிட்டு சரியாக கையை கழுவவில்லை என்றாலோ விரல் இடுக்குகளில் தங்கும் தொற்றுகள் உணவின் மூலமாக வயிற்றுக்கு சென்றுவிடும்.
வீட்டில் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னை அதிகம் வருகிறது என்றால், வீட்டில் இருப்பவர்களின் நகங்கள், மற்றும் வாங்கி வரும் காய்கறிகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். சமைப்பதற்கு முன், காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க நமக்கு சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை வைத்தே ஒரு நாட்டு மருந்தை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாய்விடங்கம் 25 கிராம், மிளவு 3-5 கிராம், குப்பைமேனி சாறுடன் கலந்து வெயிலில் வைத்து அந்த சாறு வற்றும் வரை வைக்கவும்.
Advertisment
Advertisements
சாறு வற்றிவுடன், இதை எடுத்து பொடி செய்து, வைத்துக்கொண்டு, அரை டீஸ்பூன் அளவுக்கு தொடர்ந்து 3 நாட்கள் இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். 2 வயதில் இருந்து கொடுக்கலாம். குழந்தைகளின் உடல் எடை 10 கி. இருக்கிறது என்றால், கால் டீஸ்பூன், அதற்கு மேல் எடை இருந்தால் அரை டீஸ்பூன் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 3 வேளையும் உணவுக்கு பிறகு தேன் கலந்து இதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.