பொதுவாக மனித உடல் சீராக இயங்குவதற்கு சத்துக்கள் மிகவும் அவசியமான ஒன்று. அதற்கு நம் உணவில் சத்தான பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாக நம் பாரம்பரிய மற்றும் இயங்கை உணவுகளின் பயன்கள் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லலாம்.
நடுவில் கொரோனா தொற்று தாக்கத்தின்போது, பலருக்கும், இயற்கை மருத்துவத்தின் மகிமை தெரியவந்தது. அதுவரை ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்தியவர்கள் கூட கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இயற்கை மருத்துவத்தை நாடி செல்ல தொடங்கினர். தற்போது பெரும்பாலாலும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துவிட்ட நிலையில், பழையபடி ஃபாஸ்ட் புட் நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
நம் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து தான் நமது உடல் இயங்குகிறது. சத்தான ஆகாரம் இல்லை என்றால் வயிறு நிரம்பினாலும், உடலின் செயல்திறன் என்பது குறைவாக தான் இருக்கும். அதிலும் குறிப்பாக விட்டமன் சி இல்லை என்றால், உடல் இயங்குவது மிகவும் கடினம். ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 150 மில்லி கிராம் விட்டமின் சி தேவை. இதை எந்த ஃபாஸ்ட் புட்டிலும் நமக்கு கிடைக்காது.
விட்டமின் சி அதிகம் தரக்கூடிய பொருள் என்றால் அது நெல்லிக்காய் தான். பெரிய நெல்லிக்காய் ஒன்றில், 100 மில்லி கிராம் முதல் 600 மில்லி கிராம் வரை விட்டமின் சி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே அன்றைய தினத்திற்கு தேவையான விட்டமின் சி கிடைத்துவிடும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இது பற்றி பலரும் அறியாமல் இருக்கிறார்.
Healthy Amla Immune Booster Drink packed with vitamin C and antioxidants to keep your body strong and healthy! 🌿💪 [...
Posted by Ram Sivaritha Vlogs on Thursday, October 10, 2024
நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி, மட்டும் தான் ஹைலி தெர்மாஸ்டேபிள்.
நெல்லிக்காய் ஜூலை கொதிக்க வைத்தாலே அல்லது குளிரூட்டினாலே அதில் இருக்கும் விட்டமின் சி உடையாது. உங்கள் உடலைமைப்பு சீராக இயங்குவதற்கு விட்டமின் சி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு, நெல்லிக்காய் சாப்பிடுவதும் முக்கியம் தான். காலையில் ஒரு நெல்லிக்காய் ஜூன் குடிப்பது பெரிய பலன் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil