ஆண் பெண் யாராக இருந்தாலும், உடல் எடை அதிகரிப்பு என்பது பெரிய பிரச்னை தான். உடல் மெலிந்த நபர்களை விட, உடல் எடை அதிகமான நபர்களுக்கு தான் அதிகமான நோய் தாக்கம் இருக்கிறது. இதனால் உடல் எடையை சரியாக வைத்திருப்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதே சமயம், மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக பலரும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
Advertisment
குறிப்பாக பெண்கள், பிரசவத்திற்கு பிறகு, உடல் எடை அதிகரித்து, பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இந்த வகையிலான பெண்கள், தங்கள் உடல் எடையை குறைக்க, பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆங்கில மருத்துகளை பயன்படுத்தும்போது, அதில் பக்க விளைவுகளும் அதிகமாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியவதில்லை. இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து உடல் எடையை குறைக்கலாம்.
அந்த வகையில், டாக்டர் உஷா நந்தினி, பெண்கள் அதிகம் சந்திக்கும் பி.சி.ஒ.எஸ் தொப்பையை எப்படி குறைப்பது என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், உடல் எடை எவ்வளவு இருக்கிறது என்பதை மிஷினில் பார்ப்பதை விட, ஒரு டேப் வைத்து அளக்க வேண்டும். பெண்கள் தங்கள், வயிறு, இடுப்பு, உள்ளிட்ட பகுதிகளில் உடல் எடை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பகுதிகளில் இருக்கும் எடையை குறைக்க, நெல்லிக்காய் ஜூஸ் பெரிய அளவில் உதவி செய்யும்.
Advertisment
Advertisements
நெல்லிக்காய் ஜூஸ் உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவி செய்யும். 3 நெல்லிக்காய் எடுத்து அதன் விதையை நீக்கிவிட்டு, அதில், ஒரு சிறு துண்டு இஞ்சி, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக காலை 11 மணியளவில் குடிக்க வேண்டும். குறிப்பாக இந்த ஜூஸை வடிகட்ட கூடாது. இந்த மாதிரி ஜூஸ் எடுத்துக்கொள்ளும்போது உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். வயிறு மற்றும் இடுப்பை சுற்றி இருக்கும் அதிகப்படியான கொழுப்பு நீங்கும் என்று கூறியுள்ளார்.