நரம்புகளை பலமாக்கும்; உடல் வலியை குறைக்கும்... இந்த உணவுகளை அடிக்கடி சேருங்க: டாக்டர் கார்த்திகேயன் டிப்ஸ்

பெருங்குடலில் இருக்கும் ஒரு முக்கியமான பாக்டீரியா கிருமி. புளிக்கவைக்கப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 உள்ளது.  அதேபோல் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் பி12 இருக்கிறது.

பெருங்குடலில் இருக்கும் ஒரு முக்கியமான பாக்டீரியா கிருமி. புளிக்கவைக்கப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 உள்ளது.  அதேபோல் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் பி12 இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Narambu

நமது உடலில் உள்ள நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் பி12 என்ற ஊட்டச்சத்து மிகவும் அவசியம். இந்த சத்து பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் கிடைக்கும். ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு எப்படி வைட்டமின் பி12 சத்து கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. எதையும் யோசிக்க முடியாத நிலை, மூளை மந்தமாக இருப்பது, மூச்சு விடுவதில் சிரமம், இவைகள் வைட்டமின் பி12 பற்றக்குறையால் ஏற்படும்.

Advertisment

அதே சமயம், வைட்டமின் பி12 கிடைத்தால், உடனாயடியாக சுறுசுறுப்பு கிடைப்பதை உணரவ முடியும். சில சைவ உணவுகளில் வைட்டமின் பி12 இருக்கிறது. காளான்கள் மற்றும் சில வகை பாசிகளில் வைட்டமின் பி12 இருக்கிறது. இயற்கையாக நமது உடம்பால் வைட்டமின் பி12 சத்தை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு முக்கியம் பெருங்குடலில் இருக்கும் ஒரு முக்கியமான பாக்டீரியா கிருமி. புளிக்கவைக்கப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 உள்ளது. 
அதேபோல் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் பி12 இருக்கிறது.

குறிப்பாக தயிர் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளில் வைட்டமின் பி12 அதிகம் இருக்கிறது. நாம் அரிசி கோதுமை சார்ந்த உணவுகளை சாப்பிடும்போது, அதில் இருக்கும் கிருமிகளின் துகள்கள் இருக்கும். இதன் மூலம் நமக்கு தெரியாமலே உடலில் அசைவம் கலக்கிறது. நரம்புக்கு மட்டும் இல்லாமல், ரத்த அனுக்களை உற்பத்தி செய்யவும் வைட்டமின் பி12 பயன்படுகிறது.

Advertisment
Advertisements

மாதுளை, கிவி பழம், அவக்கோடா பழம், ஆகிய பழங்களில் பி12 சத்து அதிகம் உள்ளது. அதேபோல் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா ஆகிய பழங்களில் பி12 இருக்கிறது என்றாலும் மிக மிக குறைவாக உள்ளது. பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், அத்திப்பழம், பேரிட்சம் பழம் ஆகியவற்றிலும் குறைவான பி12 இருக்கிறது என்று டாக்டர் கார்த்திக்கேயன் கூறியுள்ளார்.

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: