பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது அவசியம் தான் என்றாலும் கூட அதுவே அளவுக்கு மிஞ்சினால் உடலுக்கு பாதிப்பையும் தரக்கூடும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் மட்டும் தான் அது உடலுக்கு நன்மை தரும். அது குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பிரச்னைதான். இதற்கு முக்கிய உதாரணம் சர்க்கரை.
Advertisment
உடலில் சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்க வேண்டும். சமநிலை தவறி அதிகமானால் ஹைசுகர் என்றும், குறைவானால் லோசுகர் என்றும் சொல்வார்கள். ஆக மொத்தத்தில் இரண்டுமே சர்க்கரை வியாதியை தான் குறிக்கும். அதனால் உடலுக்கு என்ன சத்து தேவை என்பதை புரிந்துகொண்டு, அந்த சத்துக்கள் கிடைக்கும் உணவு பொருட்களை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது.
அந்த வகையில், பாதாம் பருப்பையும் அளவுடன் எடுத்துக்கொள்வது தான் நமக்கு சிறந்த நன்மையை கொடுக்கும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார். பாதாம் பருப்பை எப்போதும் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதில் இருக்கும் தோலை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிடுவது தான் சிறந்த நன்மை தருவதாக இருக்கும். பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடும் போது அந்த தோல் வயிற்றுக்குள் சென்று செரிமான பிரச்னையை ஏற்படுத்தும்.
ஏற்கனவே அஜீரன கோளாறு இருக்கிறது ஆனால் பாதாம் பருப்பை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதன் தோலுடன் சாப்பிடுவது நல்லதல்ல. பாதாம் பருப்பின் தோலில் டேனின், ஃபைடிக் ஆசிட் என்ற இரு முக்கியமான வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதி பொருட்கள் நம் வயிற்றுக்குள் செல்லும்போம் நாம் சாப்பிடம் மற்ற உணவு பொருட்களில் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் எதுவும் முழுமையாக கிடைக்காமல் போகும். மேலும் பாதாம் பருப்பின் தோல் உடலில் பித்தத்தை அதிகமாக்கும்.
Advertisment
Advertisements
பாதாம் பருப்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதன் நன்மைகள் நமக்கு அதிகமாக கிடைக்கும். இரவில் பாதாம் பருப்பை ஊறவைத்துவிட்டு, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இப்படி சாப்பிடும்போது உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம். ஒருநாளைக்கு 8-10 பாதாம் பருப்பு சாப்பிட்டாலே அதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும். அதுவே கோடைகாலமாக இருந்தால் 4-5 பாதாம் பருப்பே போதுமானதாக இருக்கும். அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் உடல் உஷ்னம் அதிகமாகும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.