கத்திரிக்காய் சாப்பிடுங்க தோல் பளபளக்கும்… ஆனால் இப்படி வேண்டாம்: டாக்டர் லக்ஷ்மி திலகம்
தனக்கு அரிப்பு இருக்கிறது அதனால் கத்தரிக்காய் சாப்பிடுவதில்லை என்று சொல்வார்கள். ஆனால் அனைவரும் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் கூறியுள்ளார்.
தனக்கு அரிப்பு இருக்கிறது அதனால் கத்தரிக்காய் சாப்பிடுவதில்லை என்று சொல்வார்கள். ஆனால் அனைவரும் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என டாக்டர் கூறியுள்ளார்.
நாம் சமையல் அறையில் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். ஊதா, வெள்ளை, பச்சை என பல்வேறு நிறங்களிலும், நீள்வட்டம், உருண்டை என பல வடிவங்களிலும் இது கிடைக்கிறது. வெறும் சுவையான காய் மட்டுமல்ல, இது நம் உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கக்கூடியது. ஆரோக்கியமான வாழ்விற்கு கத்தரிக்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
Advertisment
கத்தரிக்காயில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரி கொண்ட இது, உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். கத்தரிக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடண்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகின்றன. இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. சமையலில், கத்தரிக்காயை வைத்து சாம்பார், கறி, வதக்கல், பொரியல், புளிக்குழம்பு, அடை என பல்வேறு சுவையான உணவுகளை சமைக்கலாம். இதன் தனித்துவமான சுவை பல உணவு வகைகளுக்கு சிறப்பை சேர்க்கிறது. கத்தரிக்காயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.
அதே சமயம் சிலர் தனக்கு அரிப்பு இருக்கிறது அதனால் கத்தரிக்காய் சாப்பிடுவதில்லை என்று சொல்வார்கள். ஆனால் அனைவரும் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எப்படி சேர்த்துக்கொண்டால் அரிப்பு பிரச்னை வராது என்பது குறித்து, டாக்டர் லக்ஷ்மிதிலகம் கூறியுள்ளார். கத்தரிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. நமது தோலை பாதுகாப்பதே கத்தரிக்காய் தான். கத்தரிக்காயில் தோல் எப்படி இருக்கிறதோ அதே மாதிரியான மினுமினுப்பு நமது உடலில் இருக்கும்.
Advertisment
Advertisements
சிலர் அரிப்பு இருக்கிறது என்பதால் கத்தரிக்காய் சாப்பிடமாட்டேன் என்று சொல்வார்கள். புளிகுழம்பில் சேர்த்த கத்தரிக்காய் தான் சாப்பிட கூடாது. சாம்பாரில் சேர்த்த கத்தரிக்காய் சாப்பிடலாம். வேக வைத்தும் சாப்பிடலாம். புளி சேர்க்காமல் செய்த எந்த உணவிலும் கத்தரிக்காய் சேர்த்து சாப்பிடலாம். புளி கலந்ததை சாப்பிட்டால் அரிப்பு ஏற்படும். அதனால் புளி கலந்த குழம்பில் சேர்த்த கத்தரிக்காய் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார்.