தாய்மை என்பது ஒரு வரம் என்று சொல்வார்கள். அதேபோல் பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்றும் சொல்வார்கள். இதனால் பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் ஒவ்வொரு ஆணும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். அதேபோல் பெண்களும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதில் சரியான புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
Advertisment
இதில் கர்ப்பிணி பெண்கள், முதல் 3 மாதங்கள், 3-ல் இருந்து 7 மாதங்கள், கடைசி 3 மாதங்கள் என ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தங்கள் மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வது அவசியம். கர்ப்பிணி பெண்கள் பலரும் தங்களுக்கு பிறகும் குழந்தை வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முதல் ஆசையாக இருக்கும். இதற்காக உணவில் குங்குமப்பூ உள்ளிட்ட பொதுட்களை சேர்த்துக்கொள்வார்கள்.
ஆனால் இயற்கையில் சாதாரணமாக நமக்கு கிடைக்கும் இளநீரை குடித்தாலே குழந்தை வெள்ளையாக பிறகும் என்று, டாக்டர் ஐஸ்வர்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த கோடை காலத்தில் இளநீர் குடிக்கலாமா வேண்டாமா என்பதே பல கர்ப்பிணி பெண்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் இளநீர் குடிக்கலாம். முதல் 3 மாதங்களில் வாமிட்டிங் அதிகமாக இருந்தால் இளநீர் குடிக்கலாம் என்று சொல்வேன்.
இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் குளுக்கோஸ் போன்ற, பொருட்களை தேடி போக வேண்டாம். இயற்கையாக நமக்கு கிடைக்ககூடிய இளநீரை குடிக்கலாம். அதேபோல் இளநீர் குடித்தால் சளியோ இருமலோ பிடிக்காது. இது தவறான தகவல் இதை மறந்துவிடுங்கள். தினமும் கூட இளநீர் குடிக்கலாம். உங்களுக்கு சுகர் இருந்தால், காலையில் 11 மணிக்கு இளநீர் குடிக்கலாம். சுகார் அதிகாரிக்காது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடிப்பது நல்லது.
Advertisment
Advertisements
அதேபோல் இளநீர் குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறகும், முடி அதிகமாக இருக்கும் என்பது எல்லாம் முற்றிலும் உண்மையான தகவல் தான். அதனால் இளநீர் குடிப்பது எப்போதும் நல்லது தான் என்று கூறியுள்ளார்.