உடல ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு அவசியம். அதேபோல் ஆரோக்கியமான உடல் அமைப்புடன் பலவகையான விஷயங்களை பார்த்து ரசிக்க கண்கள் மிக மிக அவசியம். கண்களை பாதுகாக்கவும், கண்பார்வையை அதிகரிக்கவும், இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை பயன்படுத்தி சத்துக்களை பெறலாம்.
Advertisment
அந்த வகையிலான ஒரு உயர்ந்த மதிப்பை உடையது தான் முருங்கை கீரை. கீரைகள் என்றாலே உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். தினசரி உணவில் ஒரு கீரையாவது சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக முருங்கை கீரை பல நன்மைகளை கொடுக்கிறது. கண்பார்வையை மேம்படுத்தும், பீட்சா கரோட்டின் என்ற சத்து கிட்டத்தட்ட 80000-90000 அளவு தேவை என்று சொல்வார்கள்.
அந்த அளவுக்கு இந்த சத்து முருங்கை கீரையில் மட்டுமே இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். மிக மிக உயர்ந்த கண்களுக்கு பலன் தரக்கூடிய கீரையாக இருக்கும் முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொண்ண வேண்டியது அவசியம். இந்த கீரையை துவையல் அரைத்து சாப்பிட்டால் அதன் பலன் இன்னும் கூடுதலாக கிடைக்கும்.
Advertisment
Advertisements
துவையல் அரைக்க தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை – 2 கப்
காய்ந்த மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 10
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
தேங்காய் துண்டுகள் – சிறிதளவு
சீரகம், பாசிபருப்பு சிறிதளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பான் வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், அதில், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனுடன், சீரகம், பாசிபருப்பு சிறிதளவு சேர்க்கவும். அடுத்து புளி சேர்த்து வதக்கி, முருங்கை கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியாக இந்த கலவையை, எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான முருங்கை கீரை துவையல் ரெடி.