பொதுவாக கறிகள் தயாரிப்பிலும், இனிப்புகள் தயாரிப்பிலும் நெய் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நெய்யானது உணவுகள் மற்றும் இனிப்புகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. குறிப்பாக நெய்யை சூடான உணவோடு சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான சுவையும், பலன்களும் கிடைக்கும் என்கிறார்கள்.
தினசரி காலை வெறும் வயிற்றில், நெய் குடிப்பதால் சருமத்தின் நிறம் மேம்படும். மேலும் குடல் அழற்சி குறைந்து செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் இந்த பழக்கம் வாயு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. குடலைச் சுத்தப்படுத்துவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற இது உதவுகிறது.
மேலும் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை தருவதோடு, அதீத பசியை கட்டுப்படுத்துகிறது. இது குறித்து டாக்டர் பொற்கொடி கூறுகையில், நெய் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது வயிறு சுத்தமாக இருக்கும் ஆரோக்கியமான நிலையில், இருக்கும். உடல் ஹார்மோன் லெவலை சமநிலை செய்து அதிகம் சாப்பிடும் நிலையை கட்டுப்படுத்தும். இதன் மூலம் உடல் எடை குறையும்.
நெய்யில் இருக்கும், வைட்டமின், ஏ.டி இ ஆகிய சத்துக்கள் உடல் சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும். இளமையுடன் இருக்க உதவும் நெய், முடி ஆரோக்கியமாக வளவும், மூட்டு இணைப்புகளில் ஏற்படும் வலியையும் குறைக்கும். மூட்டுவலி, பின்முதுகுவலி, தோல்பட்டை வலிகளை போக்கும் வல்லமை நெய்க்கு உண்டு என்று கூறியுள்ளார் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.