இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை சர்க்கரை நோய். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது அவசியம். ஆனால் இவர்கள், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறார்கள். குறிப்பாக நமக்கு எளிமையாக கிடைக்கும் உணவு பொருட்களை கூட சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடனே இருக்கின்றனர்.
அந்த வகையிலான ஒரு உணவு தான் வேர்க்கடலை. பொதுவாக நமக்கு எளிமையாக கிடைக்கும் உணவு பொருட்களில் ஒற்றாக இருக்கும் வேர்க்கடலையில், பல சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக நமது உடலுக்கு தேவையான, முக்கிய சத்துக்களில் ஒன்றாக இருக்கும் புரதம் வேர்க்கடலையில் அதிகம் உள்ளது. இதில் கார்போஹைட்ரோட், புரதம், கொழுப்பு ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் மாவுச்சத்து குறைவாக உள்ளது. அதே போல் நிறைய வைட்டமின்கள் இதில் உள்ளது.
இதில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள மருத்துவர் சிவபிரகாஷ், வேர்க்கடலையில் 70 சதவீதம் நல்ல கொழுப்புகள் உள்ளது. அதனால் இது உடலில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தாது. அதே சமயம் இதில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால், உடனடியாக வயிறு ஃபுல் ஆனா உணர்வை கொடுக்கும். இதில் இருந்து உடலுக்கு தேவையான ஆற்றலும் அதிகமாக கிடைக்கும்.
புரதச்சத்து என்பது கண்டிப்பாக நமது உடலுக்கு தேவையான ஒன்று. புரதம் மற்றும் கொழுப்பு இதில் அதிகம் இருப்பதால், இதை எடுத்துக்கொள்ளலாம். வேர்க்கடலை நமக்கு எளிதில் கிடைக்கும் பொருள். இதனை வறுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் மாலை ஸ்னாக்ஸ் எடுத்துக்கொள்ளும்போது அதனுடன் சேர்ந்து இந்த வேர்க்கடலையை சாப்பிடலாம். சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கூட இதனை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 30-40 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவது, உடலக்கு நன்மை தரும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“