Tamil Health Update : உலகில் இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது நீரிழிவு நோய். உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த நோய் ஏற்படுகிறது உணவு பொருட்களில் மாற்றம் செய்துவரும்போது இந்த நோயை கட்டுக்குள் வைக்க முடியும்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடிய உணவுகளை அதிகம் எடுத்தக்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் அத்தகைய ஒரு மருந்து மா இலை. மா இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் பண்புகள் நிறைந்தவை.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மா இலை நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தடுக்கவும் உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவை எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.
சர்க்கரை நோய்க்கு மா இலைகள் பயன்படுவது எப்படி?
''மாம்பழ இலைச் சாறு (Mangiferin) குடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்க உதவும். ஆல்பா குளுக்கோசிடேஸ் என்ற நொதியைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது, இதன் மூலம் மா இலை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
மா இலைகள் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸின் விநியோகத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவும். மா இலைகளில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டிற்கும் நன்மை பயக்கும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க மா இலைகளை எப்படி பயன்படுத்துவது?
சர்க்கரை நோய்க்கு மா இலைகளைப் பயன்படுத்த மிக எளிய முறையைப் பின்பற்ற வேண்டும். 10-15 மா இலைகளை எடுத்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். இலைகளை நன்கு கொதித்த பிறகு, இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். தினமும் காலையில் தொடர்ந்து சில மாதங்களுக்கு குடிப்பதால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம்.
ஆனாலும் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உணவை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்க உங்கள் மருத்துவர் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் கவனமாக பின்பற்றவும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணுங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“