நமது உணவுமுறையில் காலப்போக்கில் மறந்த ஒரு தானியம் தான் கேழ்வரகு (ராகி). பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க, ராகி பயன்படுகிறது. சிறுதானியங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும் இந்த கேழ்வரகில், பல நோய்களை தீர்க்கும் சத்துக்கள் உள்ளது. ஆனால் இன்றைய காலக்கட்ட இளைஞர்களுக்கு கேழ்வரகு என்றால் என்ன என்றே தெரியாது. அதேபோல் கோதுமையை பயன்படுத்தும் அளவுக்கு கூட கேழ்வரகை யாரும் பயன்படுத்துவதில்லை.
Advertisment
மனிதனுக்கு ஏற்படக்கூடிய மூட்டுகள் தொடர்பான பிரச்னைகள் அனைத்திற்குமே, ராகி ஒரு முக்கிய பயனை கொடுக்கிறது. கேழ்வரகில், இரும்புச்சத்து, கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகை நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நிறைய பெண்களுக்கு ரத்தசோகை மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்னைகள் அதிகம் இருக்கிறது. இதற்கு தீர்வு தரக்கூடிய ஒரு விஷயம் தான் கேழ்வரகு.
ஒரு நாளைக்கு கேழ்வரகு 50 கிராம் அளவுக்காவது சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது நமது உடலில் எலும்புகள தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்கும். கழுத்து எலும்பு, மற்றும் இடுப்பு எலும்பு பிரச்னை நமக்கு ஏற்படும்போது, மற்றும் எலும்பு தேய்மானம் ஏற்படும்போது அதனை சரி செய்ய கேழ்வரகு பயன்படுகிறது. இந்த கெழ்வரகை உணவாகவோ அல்லது, திண்பண்டங்களில் சேர்க்கப்பட்டோ நாம் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது கால்சியம் சத்து அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள், கால் மூட்டு தொடர்பான பிரச்னைகள், இவை அனைத்தும் சரியாக, கேழ்வரகு உதவி செய்யும். இந்த கேழ்வரகை முளைக்கட்டி பயன்படுத்தும்போது அதன் சத்துக்கள் அதிகமாக கிடைக்கும். பொதுவாக ஒரு தானியத்தை முளைக்கட்டி பயன்படுத்தும்போது, அதன் ஆரோக்கிய திறன் அதிகரிக்கும். அதனால் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கேழவரகு சார்ந்திருக்கும் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
Advertisment
Advertisements
குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிடுவது அதிக நன்மைகளை கொடுக்கும். சர்க்கரை நோய்க்கு சிறந்த மருத்துவமாக கேழ்வரகு பயன்படுகிறது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.