பற்கள் மஞ்சள் ஆகிறதா? கால்சியம் சத்து குறைபாடாக இருக்கலாம்; இந்த கஷாயம் குடிங்க! டாக்டர் நித்யா
மீன், மற்றும் பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் இவை இரண்டையும் விட நமக்கு எளிதில் கிடைக்கும் கேழ்வரகில் (ராகி) அதிக கால்சியம் சத்து இருக்கிறது.
மீன், மற்றும் பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் இவை இரண்டையும் விட நமக்கு எளிதில் கிடைக்கும் கேழ்வரகில் (ராகி) அதிக கால்சியம் சத்து இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். இந்த சத்து மீனில் அதிகமாக இருக்கிறது அதேபோல் பாலில் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அவை அனைத்தையும் விட, இந்த சிறுதானியத்தில் அதிகபட்சமாக கால்சியம் சத்து இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு அவசியம். உணவின் மூலம் மட்டும் தான் உடலை ஆரோக்கியமான வைத்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக எந்தெந்த பாகத்திற்கு என்னென்ன சத்துக்கள் தேவை என்று தெரிந்துகொண்டு அந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் எலும்பு ஆரோக்கியத்திற்கு என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
உடலில் தேவையற்ற கொழுப்புகளை எரிக்கும் சக்தி கால்சியத்திற்கு உண்டு. உடலில் சிறிது காயம் ஏற்பட்டு, ரத்தம் வந்தால், அந்த இடத்தை அழுத்தி பிடிக்கும்போது ரத்தம் உறைதல் ஏற்பட்டு ரத்தம் வருவது சிறிது நேரத்தில் நின்றுவிடும். அந்த வகையில் மீன், மற்றும் பாலில் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் இவை இரண்டையும் விட நமக்கு எளிதில் கிடைக்கும் கேழ்வரகில் (ராகி) அதிக கால்சியம் சத்து இருக்கிறது. மீனில் 300 மில்லிகிராம் அளவு என்றால் கேழ்வரகில் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.
Advertisment
Advertisements
கேழ்வரகை அதன் காம்புடன் எடுத்து தண்ணீரில் போட்டு அத்னுடன் முழு வெற்றிலை, மிளகு, சீரகம் சேர்த்து, ஒரு மணி நேரம் வரை நன்றாக கொதிக்க வைத்து, 2 லிட்டர் தண்ணீர் ஒரு லிட்டர் ஆகும் வரை கொதிக்க வேண்டும். அதன்பிறகு இதனை எடுத்து குடித்து வந்தால் பல நோய்கள் தீரும். உடலுக்கு கால்சியம் சத்து பெருமளவில் கிடைக்கும். பல கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இன்றும் இந்த செய்முறையை பயன்படுத்தி வருகின்றனர். உடலில் கால்சியம் சத்து குறையும்போது பற்கள் மஞ்சளாக மாறும். இதனை தடுக்க, இந்த கசாயம் வைத்து குடித்தால் அனைத்து பிரச்னைகள் தீரும் நீங்களும் ஒருமுற ட்ரைபண்ணி பாருங்க.