கேன்சரில் இருந்து பாதுகாக்கும் வல்லமை... பார்வைத் திறனையும் அதிகரிக்கும் இந்த ஜூஸ்; இப்படி செய்து குடிங்க: டாக்டர் கார்த்திகேயன்
சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்லது. உடலில் உள்ள கெட்ட உப்புகளை வெளியேற்றுவது என பல நன்மைகள் இருந்தாலும், சுரைக்காயில் இயற்கையாகவே சில நச்சுத்தன்மை கொண்ட கூறுகள் உள்ளன.
சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்லது. உடலில் உள்ள கெட்ட உப்புகளை வெளியேற்றுவது என பல நன்மைகள் இருந்தாலும், சுரைக்காயில் இயற்கையாகவே சில நச்சுத்தன்மை கொண்ட கூறுகள் உள்ளன.
நம் உணவில் பயன்படுத்தும் காய்கறிகளில் நமக்கு எளிதில் கிடைக்கும் காய் சுரைக்காய்.சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகக் கோளாறுகளைக் குறைக்க உதவும். சுரைக்காய் சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு நிவாரணம் கிடைக்கும். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்லது. உடலில் உள்ள கெட்ட உப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
Advertisment
இவ்வாறு பல நன்மைகள் இருந்தாலும், சுரைக்காயில் இயற்கையாகவே சில நச்சுத்தன்மை கொண்ட கூறுகள் உள்ளன. குறிப்பாக, கசப்பான சுரைக்காயில் குக்குர்பிடாசின் (Cucurbitacin) எனப்படும் நச்சுப்பொருள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நச்சுப்பொருள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது அதிகமாக இருந்தால், அதை சாப்பிடும்போது வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
இந்த நச்சுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, சுரைக்காயை சமைப்பதற்கு முன் சிறிதளவு வெட்டி சுவைத்து பார்க்கவும். கசப்பாக இருந்தால் அந்த சுரைக்காயை பயன்படுத்த வேண்டாம். சுரைக்காய் சாறு குடிக்கும்போது, அது கசப்பாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கசப்பாக இருந்தால் உடனடியாக குடிப்பதை நிறுத்திவிடுங்கள். பச்சையான சுரைக்காய் சாறு குடிப்பதை தவிர்க்கவும். சமைத்த சுரைக்காய் சாறு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது.
பொதுவாக, நன்றாக விளைந்த மற்றும் கசப்பில்லாத சுரைக்காய் சமைத்து உண்ண பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது. அதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இருப்பினும், சுரைக்காயின் கசப்புத்தன்மை குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதே சமயம் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வல்லமை சுரைக்காய்க்கு உண்டு. சுரைக்காய் அடிக்கடி சாப்பிடும்போது பரம்பரை புற்றுநோயாக இருந்தாலும் அதனை தள்ளிப்போடும் திறன் உள்ளது.
Advertisment
Advertisements
சுரைக்காய் துண்டு துண்டுகளாக நறுக்கி, அதில் ஒரு டீஸ்பூன் மிளகு சேர்த்து, மிக்ஸியில், அரைத்து, வடிக்கட்டி அதில் கொத்தமல்லி இலை சேர்த்து சுரைக்காய் ஜூஸாக குடிக்கலாம். அடுத்து கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய், பூண்டு உள்ளிட்ட பொருட்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்து, அதில் சுரைக்காயை, பீட்ரூட் சீவும் கட்டையில் வைத்து சீவி, அந்த மாவில் சேர்த்து அடையான செய்து சாப்பிடலும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும்.