ஒவ்வொரு மனிதனுக்கும் 100 வயது வரை வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதன் 60 வயதை கடந்து வாழ்ந்தாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர்களை வயதான பிறகு வரும் பல நோய்களை தங்களது இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்களின் ஆயுட்காலமும் குறைந்து, விரைவில் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.
Advertisment
நமது முன்னோர்கள், வாழ்ந்த காலத்தை விட, குறைவான காலமே இன்றைய மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கம் தான். அன்றைய காலக்கட்டத்தில், நம் முன்னோர்கள், வயலில், விவசாய வேலை பார்த்து, தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே விளைவித்து சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் தினமும் ஃபார்ஸ்ட் புட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் விவசாயத்தில், இயற்கையில் கிடைக்கும், எரு மற்றும், இலை தழைகளை உரமாக பயன்படுத்தி வந்த காலம்போய், இப்போது விவசாய பணிகள் செய்யும் விவசாயிகள், ரசாயன உரத்தை பயன்படுத்தும் நிலை தான் உள்ளது. இந்த உரமும் மனித உடலுக்கு ஒரு வகையில் தீமையை தான் கொடுக்கிறது. இதன் மூலம் இப்போது மனிதர்கள், சாப்பாடு எந்த அளவிற்கு சாப்பிடுகிறார்களோ, அந்த அளவிற்கு பெரும்பாலும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நிலையும் உள்ளது
இந்த நிலையை கடந்து சென்று, 100 வயது வரை வாழ ஒரு முக்கிய ஆலோசனை இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். அதுதான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு. பூமியில் விளையும் அனைத்து உணவு பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு பயன்படுகிறது. அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகளவு நன்மை இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். இதில் சர்க்கரையின் க்ளைசிபி இன்டெக்ஸ் மிகவும் குறைவு.
Advertisment
Advertisements
உருளைக்கிழங்கு, வேகமாக சர்க்கரையை உயர்த்தும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்க வேகவைத்துவிட்டோம் என்றால், அதில் இருக்கும் க்ளைசிபி இன்டெக்ஸ் குறைந்துவிடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் சர்க்கரை வள்ளி கிழங்க சாப்பிட தொடங்கிவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.