ஓட்ஸ்-ஐ விட பெஸ்ட்; சுகர் இருக்கிறவங்க இந்த சூப் சாப்பிடுங்க: டாக்டர் கார்த்திகேயன்
அதிகம் சாப்பிட கூடாது என்றாலும் வாரத்திற்கு 2 முறை பார்லியை தண்ணீராக வைத்து குடிக்க வேண்டியது அவசியம். அதேபோல் பார்லி கஞ்சி, பார்லி சூப் செய்து சாப்பிடலாம்.
அரிசி, கோதுமையை விட மிகவும் சத்தான உணவுகளில் ஒன்று பார்லி. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவாகள், இதய நோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் இந்த பார்லியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கூட இந்த பார்லியை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
Advertisment
அதிகம் சாப்பிட கூடாது என்றாலும் வாரத்திற்கு 2 முறை பார்லியை தண்ணீராக வைத்து குடிக்க வேண்டியது அவசியம். அதேபோல் பார்லி கஞ்சி, பார்லி சூப் செய்து சாப்பிடலாம். பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்து மிகவும் அதிகம். பார்லி கஞ்சி குடிக்கும்போது பசி தாங்கும் தன்மை கொண்டது. வெகுநேரம் பசியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். வைட்டமின்கள், மினரல்கள், தாது பொருட்கள் அதிகளவு பார்லியில் இருக்கிறது.
பார்லியை சமைத்து சாப்பிடும்போது கைக்குத்தல் அரிசியை சமைத்து சாப்பிடும்போது என்ன மாதிரியான சுவை இருக்குமோ அதே சுவையில் தான் இருக்கும். உடலில் இருக்கும் பித்த நீர் குடல் பகுதிக்கு வந்தால் தான் உணவு செரிமானம் ஆகும். ஆனால் பித்தப்பையில் கட்டிகள் ஏற்படும்போது அதனை தடுக்கும் வல்லமை பார்லிக்கு உண்டு. ஒருவருக்கு வேகமாக எடல் எடை குறைந்தால், அவர்களுக்கு பித்த பையில் கற்கல் வர அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதன் காரணமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து பார்லியில் இருக்கு கிடைக்கிறது. பல ஆராய்ச்சிகளில், பார்லி பித்தப்பையில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்பது நிரூபிகக்ப்பட்டுள்ளது, பார்லியில் வைட்டமின் பி12 அதிகம் இருப்பதை இரத்த சோகை போன்ற நோய்களையும் குணப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் உணவு பொருட்களின் அடிப்படையில் பார்லி மற்றும் ஓட்ஸ் வைத்து சோதனை மேற்கொண்டதில் ஓட்ஸ்-ஐ விட, பார்லி அதிக நன்மை தரக்கூடியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
பார்லி சூப் எப்படி செய்வது என்றால், கால் கப் பார்லி எடுத்து அதை 2-3 முறை நன்றாக கழுவி, 7 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து ஒரு பாணில், சிறிதளவு எண்ணெய், விட்டு அதில், இஞ்சி, பூண்டு, காம்புடன் கட் செய்த கொத்தமல்லி இலை, நறுக்கிய பீன்ஸ், துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பிறகு ஊறவைத்த பார்லியை தண்ணீருடன் சேர்த்து, மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 10-15 நிமிடங்கள் கொதித்வுடன், அதில் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பார்லி சூப் ரெடி. ட்ரை பண்ணி பாருங்கள்.