Advertisment

தினமும் 6- 7 பாதாம் இந்த நேரத்தில் சாப்பிடுங்க... நிபுணர்கள் கூறும் ரகசியம்!

உணவில் பாதாமை சேர்த்துக்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரத்தத்தில் இணையும் விட்டமின் இ... தினமும் கையளவு பாதாம் சாப்பிட்டா இவ்ளோ நன்மை இருக்கு!

ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான மாற்று உணவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு முடிவின்படி, தினசரி 56 கிராம் பாதாம் சாப்பிடுவது, ப்யூட்ரேட்டின் அளவை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

இதன் மூலம் உணவில் பாதாமை சேர்த்துக்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகும் என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து ஆய்வுகள் துறையின் முதுகலை ஆய்வாளரும், ஆய்வின் ஆசிரியருமான டாக்டர் ஆலிஸ் க்ரீடன் மேற்கோள் காட்டினார்.

 மேலும் உயிரணுக்களுக்கு எரிபொருளின் முதன்மை ஆதாரமாக செயல்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு ப்யூட்ரேட் முக்கியமானது. இதன் மூலம் பெருங்குடலின் சரியான இயக்கம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையைத் தொடங்க குடலுக்கு சமிக்ஞை செய்வதிலும் நன்மை செய்கிறது. கூடுதலாக, குடலில் உற்பத்தி செய்யப்படும் ப்யூட்ரேட் இரத்த ஓட்டத்தில் நுழையவும், கல்லீரல், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்த பயனை தருகிறது.

இது குறித்து தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளிவரும் ஆய்வின்படி, ப்யூட்ரேட்டின் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டது, இது பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளை உங்கள் இரத்தத்தில் நுழைவதைத் தடுக்கிறது, இது வயிற்று வீக்கத்தைக் குறைப்பதற்கும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி மற்றும் வீக்கம் போன்ற நிலைமைகளை சரி செய்யவும் உதவுகிறது.

இந்த ஆய்வுக்கு பதிலளித்த நானாவதி மருத்துவமனையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவின் தலைவர் உஷாகிரண் சிசோடியா, “பாதாமில் வைட்டமின் பி1, தயாமின், வைட்டமின் பி3 மற்றும் ஃபோலேட், வைட்டமின் பி9 போன்ற பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இதை ஊட்டச்சத்து நிறைந்த பிரதான உணவாக கூறலாம்.  நல்ல கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள பாதாம், ஒரு அவுன்ஸ் அதாவது 23 பாதாம் சாப்பிடும்போது, தாவர புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நன்மைகள் மற்றும் போதுமான இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

"அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவு போன்று, கடந்த காலங்களில் பாதாம் குறித்து பல ஆய்வுகள், வெவ்வேறு வடிவங்களில் பாதாம் பருப்பை உட்கொள்வதன் மூலம் முழுமையான உடலியல் மற்றும் அழகியல் நன்மைகளை வெளிகப்படுத்த முயற்சி செய்தன. காலப்போக்கில், வெறுமனே ஊறவைக்கப்பட்ட பாதாமை உட்கொள்வதற்குப் பதிலாக, இப்போது மக்கள் பாதாம் பால், வெண்ணெய், எண்ணெய் மற்றும் ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களின் விருப்பங்களைப் பெறுகிறார்கள், ”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், சுற்றுச்சூழல், தட்பவெப்ப நிலைகள், தனிப்பட்ட வழக்கம் (உடற்பயிற்சி போன்றவை) மற்றும் உணவு உட்கொள்ளல் ஆகியவற்றின் காரணமாக அளவு மாறுபடும் என்பதால், ஒருவர் எத்தனை பாதாம் பருப்புகளை சாப்பிட வேண்டும் என்பதற்கான பதிலை கொடுக்கிறது. "பச்சையான பாதாம் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது., குறிப்பாக இந்தியா போன்ற ஈரப்பதமான, வெப்பமண்டல காலநிலையில், பாதாம் பருப்பை ஒரே இரவில் தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்து காலை உணவுடன் 6-7 பாதாம் சாப்பிடுவது சிறந்தது.

ஆனாலும் ஒவ்வொரு நபரும் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, அதற்கேற்ப பாதாம் பருப்பின் அளவை தீர்மானிக்க வேண்டும், ”என்று டாக்டர் சிசோடியா கூறியுள்ளார். “இருப்பினும், அதிக தீவிரம், சோர்வு தரும் வேலை வாய்ப்புகள் உள்ள இளைஞர்கள், நாள் முழுவதும் சுமார் 20 பாதாம் பருப்புகளை சாப்பிடுவது, வேகவைத்த உணவுகளான செதில்கள் அல்லது பிஸ்கட்களுக்கு பதிலாக, அதன் தாது உள்ளடக்கத்தின் உதவியுடன் தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தை பெற முடியும். எலும்பு அடர்த்தி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் தசை வலிமையை மேம்படுத்த தாதுக்கள் அவசியம் என்பதால் குழந்தைகளுக்கும் பாதாம் பெரிய நன்மை பயக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பாதாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அல்லது நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும் ஏற்றது, ஏனெனில் இது கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது தொடர்பான சில ஆய்வுகள் பெருங்குடல் அல்லது குடல் மற்றும் அல்சைமர் போன்ற அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாதாம் அடிப்படையிலான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் முன் உங்கள் தோல் மருத்துவரிடம் உங்கள் தோல் / முடியின் தன்மை பற்றி விவாதித்த பிறகு பயன்படுத்துவது நல்லது என்றும் டாக்டர் சிசோடியா கூறுகிறார். "இருப்பினும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், பாதாம் தோல் மற்றும் தலைமுடிக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது. பெரும்பாலான மக்களில், பாதாம் பால் மற்றும் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமம் மிருதுவாகவும், தெளிவாகவும், ஸ்ட்ரெச்-மார்க் இல்லாததாகவும் மாற உதவுகிறது. மேலும் அவை கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கவும், பார்வையை மேம்படுத்தவும் உதவும்.

18 முதல் 45 வயது வரையிலான 87 ஆரோக்கியமான பெண்கள் மற்றும் ஆண்களை வைத்து நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது தின்பண்டங்களைத் தவறாமல் சாப்பிடுவதாகவும், தினசரி பரிந்துரைக்கப்பட்ட 22 கிராம் கொழுப்பிற்கு மேல் மிதமான அல்லது அதிக கொழுப்புள்ள உணவில் இல்லை என்றும் அவர்கள் சுயமாக கூறியுள்ளனர். ஆய்விற்காக, ஆராய்ச்சியாளர்கள் அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து அவர்கள் தங்கள் வழக்கமான தின்பண்டங்களை மாற்றிய உணவால் வேறுபடுத்தப்பட்டனர்.

ஒரு குழு ஒரு நாளைக்கு 28 கிராம் முழு பாதாம் இரண்டு பகுதிகளை சாப்பிட்டனர். மற்றொரு குழு தினமும் 28 கிராம் அரைத்த பாதாம் இரண்டு பகுதிகளை சாப்பிட்டது.  3-வது கட்டப்பாட்டு குழு மஃபின்களை சாப்பிட்டனர். அது பாதாம் பருப்புக்கு சமமான ஆற்றலை உடலுக்கு வழங்கியது. நான்கு வாரங்கள் சோதனையின் முடிவில், கட்டுப்பாட்டுக் குழுவை விட பாதாம் குழுக்கள் தங்கள் மலப் பொருட்களில் கணிசமான அளவு ப்யூட்ரேட்டைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், ஒரு கிராமுக்கு 18.2 மைக்ரோமோல்களைக் காட்டிலும் ஒரு கிராமுக்கு 24.1 மைக்ரோமோல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. குடல் போக்குவரத்து நேரம் உணவு செரிமான அமைப்பிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் எடுக்கும் நேரம் அல்லது மல நிலைத்தன்மையைப் பொறுத்தவரை வெவ்வேறு குழுக்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் காணப்படவில்லை. உடலின் சகிப்புத்தன்மைக்கு இது முக்கியமானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment