ஒவ்வொரு மனிதனுக்கும் 100 வயது வரை வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதன் 60 வயதை கடந்து வாழ்ந்தாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய இளைஞர்களை வயதான பிறகு வரும் பல நோய்களை தங்களது இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்களின் ஆயுட்காலமும் குறைந்து, விரைவில் இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.
Advertisment
நமது முன்னோர்கள், வாழ்ந்த காலத்தை விட, குறைவான காலமே இன்றைய மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கம் தான். அன்றைய காலக்கட்டத்தில், நம் முன்னோர்கள், வயலில், விவசாய வேலை பார்த்து, தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே விளைவித்து சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் தினமும் ஃபார்ஸ்ட் புட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் விவசாயத்தில், இயற்கையில் கிடைக்கும், எரு மற்றும், இலை தழைகளை உரமாக பயன்படுத்தி வந்த காலம்போய், இப்போது விவசாய பணிகள் செய்யும் விவசாயிகள், ரசாயன உரத்தை பயன்படுத்தும் நிலை தான் உள்ளது. இந்த உரமும் மனித உடலுக்கு ஒரு வகையில் தீமையை தான் கொடுக்கிறது. இதன் மூலம் இப்போது மனிதர்கள், சாப்பாடு எந்த அளவிற்கு சாப்பிடுகிறார்களோ, அந்த அளவிற்கு பெரும்பாலும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நிலையும் உள்ளது
இந்த நிலையை கடந்து சென்று, 100 வயது வரை வாழ ஒரு முக்கிய ஆலோசனை இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். அதுதான் சர்க்கரை வள்ளிக்கிழங்கு. பூமியில் விளையும் அனைத்து உணவு பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு பயன்படுகிறது. அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகளவு நன்மை இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். இதில் சர்க்கரையின் க்ளைசிபி இன்டெக்ஸ் மிகவும் குறைவு. ஜப்பானில் தி சீக்ரெட் ஆப் ப்யூ ஸோன் என்று ஒரு டாக்குமென்ரி இருக்கிறது.
Advertisment
Advertisements
அதில் உலகத்தில் 7 இடத்தில் வயதானவர்கள் அதிகம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது, இதில் முதலிடத்தில் இருப்பது ஜப்பான். அங்கு ஒக்கினோவா என்ற இடம் இருக்கிறது. அங்கு இறந்த அனைவருமே 116 வயதை கடந்தவர்கள். 103 வயதில் ஒரு பாட்டியிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் அந்த பாட்டி தினமும் நான் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுகிறேன். பர்ப்பிள் கலரில் இருக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு அது.
அதன்பிறகு கொஞ்சம் பிராக்கோலி, கடலில் இருக்கும் மீன்கள் சாப்பிடுவதாக கூறியுள்ளார். இறுதியாக நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் விவசாயம் செய்யுங்கள் என்று அந்த பாட்டி கூறியுள்ளார். 103 வயதில் எனக்கு வேண்டிய காய்கறிகள், கீரைகளை நானே பயிரிடுகிறேன் என்று அந்த பாட்டி தெரிவித்துள்ளதாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.