ஒவ்வொரு மனிதனும் தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான ஆகாரங்களை சாப்பிட வேண்டியது அவசியம். வெறும் சாப்பாட்டில் மட்டும் நமக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடாது. பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளில், பருப்பு வகைகள் என அனைத்தையும் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மாறி வரும் உணவு பழக்க முறைகளுக்கு ஏற்ப உணவுகளை சாப்பிட்டாலும் தினசரி ஒரு வேளையாவது நமது பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
நமது முன்னோர்கள் அதிக ஆண்டுகள் வாழ்ந்ததை பார்த்த நாம் நமக்கு அடுத்த தலைமுறை, அழிந்து வருவதை கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலைக்கு உணவும் ஒரு முக்கிய காரணம் தான். நமக்கு சாரணமாக கிடைக்கும் ஒரு பழத்தை உதாசினப்படுத்தவிட்டு, அதிக விலை கொடுத்து தேவையில்லாத பல பொருட்களை வாங்கி சாப்பிடுகிறோம் கூடவே நோயிலும் சிக்கிக்கொள்கிறோம். இந்த நிலையை மாற்ற எந்த பழம், அதிக நன்மை தருகிறது? எந்த உணவு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப வாழ வேண்டும்.
நம் எல்வோருக்கும் வாழைப்பழம் பற்றி நன்றாக தெரியும். ஆனால் இது எத்தை வகைகள் உள்ளது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. அதேபோல் வாழைப்பழம் எளிதில் நமக்கு கிடைத்துவிடும் என்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் குறித்து நாம் அறிந்துகொள்ள எப்போதும் முயற்சித்ததில்லை. இது குறித்து டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். செவ்வாழைப்பழம் நின்றுகொண்டே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் குதிகால் வலியை போக்கும் நிவாரணி. பெண்களுக்கு அதிக நன்மை தருவது வாழைப்பழம்.
அதேபோல் குழந்தை மெலிந்து இருக்கிறது என்றால் அந்த குழந்தைக்கு நேந்திரன் வாழை கொடுக்கலாம். குழந்தை தாய் பால் மறந்த பிறகு, அதற்கு கொடுக்க வேண்டிய முதல் உணவு மட்டிப்பழம். மூலம், பவுத்திரம், ஆசனவாயில் வெடிப்பு போன்ற நோய்களுக்கு, நாட்டுப்பழம் (மொந்தன் வாழை) சிறந்தது. பெண்களுக்கு வெள்ளைப்படுத்தல், வயிற்றுப்புண், மோரிஸ் வாழை (பச்சை வாழைப்பழம்) சாப்பிடவேண்டும். இப்படி ஒவ்வொரு வாழைப்பழத்திற்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது.
அதேபோல் நாவல் பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். நாவல் பழத்தில் உள்ள நிறமிச்சத்து உடலுக்கு எதிர்ப்பு ஆற்றலையும், கேன்சரை எதிர்த்து போராடும் திறனையும் கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“