நரம்பு தளர்ச்சி? வயலில் வளரும் இந்தச் செடியில் ஜூஸ்; 48 நாள் குடித்துப் பாருங்க: டாக்டர் சௌமிளா
ரத்த அழுத்தம் இருந்தால் அவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பக்கவாதம் வருவதற்கு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் தான் காரணமாக இருக்கிறது.
ரத்த அழுத்தம் இருந்தால் அவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பக்கவாதம் வருவதற்கு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் தான் காரணமாக இருக்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் அதிகம் சந்திக்கும் முக்கிய பிரச்னை நரம்புத்தளர்ச்சி. உடலில் நரம்புகள் பலவீனமாகும்போது இந்த பிரச்னை ஏற்படுகிறது. இந்த நோய் உடலில் பலவிதமான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். உடலில் வைட்டமின் பி12 சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமான மனஉளைச்சல், தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவது, இதுவும் நரம்பு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
Advertisment
ஒருவருக்கு நரம்புத்தளர்ச்சி வருகிறது என்றால், அவருக்கு ஒற்றை தலைவலி வரும். இது தான் நரம்புத்தளர்ச்சியின் முதல் அறிகுறி. சாதாரண தலைவலி தூங்கி எந்திரித்தாலோ, அல்லது ஒரு நாளிலோ சரியாக வேண்டும் மாறாக சரியாவில்லை என்றால் இந்த தலைவலி குறித்து சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் இருந்தாலும் அதன் மூலம் நரம்புத்தளர்ச்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு நோய் மட்டுமல்லாமல், ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளி்ட்ட பிரச்னைகளாலும் வரலாம்.
ரத்த அழுத்தம் இருந்தால் அவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பக்கவாதம் வருவதற்கு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் தான் காரணமாக இருக்கிறது. இந்த பிரச்னைகளை தவிர்க்க, வைட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி பிரச்னைகள் வராமல் தடுக்கவும், வந்தபின்பு அதில் இருந்து விடுபடவும், பப்பாளி பழம் சிறந்த தீர்வாக இருக்கும் பப்பாளி பழத்தை எடுத்துக்கொண்டு அதில் வெங்காய சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இவ்வாறு சாப்பிடும்போது பெரிய மாற்றம் தெரியவரும்.
Advertisment
Advertisements
பப்பாளி பழம் தினமும் கிடைக்காது என்றால் மற்றொரு எளிமையாக வழி இருக்கிறது. இது அருகம்புள் ஜூஸ். இந்த அருகம்புல் ஜூஸ் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, நரம்பு தளர்ச்சி குணமாகும் மாற்றம் உங்களுக்கு உடம்பில் தெரியவரும். 90 நாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது நரம்பு தளர்ச்சி முழுவதுமாக குணமாகும் என்று டாக்டர் சௌமிளா கூறியுள்ளார்.