scorecardresearch

ஒரு ஸ்பூன் நெய்… சப்பாத்தி வறண்டு போகாம இருக்க இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க!

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, நம் உணவில் இருந்து நெய்யை முற்றிலுமாக அகற்ற நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இருக்கக்கூடாது,

ஒரு ஸ்பூன் நெய்… சப்பாத்தி வறண்டு போகாம இருக்க இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் முக்கிய உணவுகளில் சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல் ரொட்டி சப்பாத்தி செய்யும்போது எண்ணெய்க்கு பதிலாக நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சாப்பிட பலரும் விரும்புவார்கள். இதை பயன்படுத்தும்போது ரொட்டி சப்பாத்தி மென்மையாக இருப்பதுடன், காய்ந்து போனது போன்ற நிலையில் இருக்காது.

ஆனால் ரொட்டியில் நெய் சேர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்களா? ஆம் எனில், எவ்வளவு? என்பது போன்ற கேள்விகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர், அஞ்சல் சோகானி, சமீபத்தில் இந்த பிரபலமான கலவையைப் பற்றி அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

இந்தியாவில் பல குடும்பங்கள், குறிப்பாக வட இந்தியாவில், சப்பாத்திக்கு நெய் தடவுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அதிகமாக இல்லாமல் சப்பாத்தியில் மிதமான அளவில், நெய் சேர்ப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, ​​நம் உணவில் இருந்து நெய்யை முற்றிலுமாக அகற்ற நினைக்கிறோம். ஆனால் அது அப்படி இருக்கக்கூடாது, ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் எடை குறைப்புக்கு நெய் எவ்வாறு உதவுகிறது?

சப்பாத்தியின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க நெய் உதவுகிறது. கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) என்பது கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளுக்கான மதிப்பீட்டு அமைப்பாகும். ஒவ்வொரு உணவும் உட்கொள்ளும் போது உங்கள் இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

நெய் உங்களை நிறைவாக உணர வைக்கிறது. நாளின் பிற்பகுதியில் நீங்கள் மற்ற கொழுப்பை உண்டாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியதில்லை.

நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன, இது உடல் எடை குறைக்க உதவுகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும், ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை பராமரிப்பதிலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

நெய்யில் அதிக வெப்பப் புள்ளி உள்ளது, இது செல் செயல்பாட்டை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது.

ஆனால் சப்பாத்திக்கு நெய் அளவுக்கு அதிகமாப இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரொட்டிக்கு ஒரு சிறிய டீஸ்பூன் நன்றாக இருக்கும். அளவுக்கு அதிகமாகச் செய்தால் அது உடலுக்குக் கேடுதான்” என கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“நெய்யில் சமைத்த பருப்பு, சாதம், பக்ரி, பாத்தி மற்றும் சப்பாத்திகளில் சேர்ப்பது அவசியம். இது அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது மற்றும் வைட்டமின் டி, ஏ மற்றும் ஈ ஆகியவற்றை எளிதாக உறிஞ்சுகிறது. மேலும் உணவின் சுவையை மேம்படுத்துகிறது.

காலையில் ரொட்டி அல்லது சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணரும் உணவுப் பயிற்சியாளருமான அனுபமா மேனன் கூறினார். மேலும்  சமையலில் பயன்படுத்தலாம். நெய் பருப்பு மற்றும் இனிப்புகளுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. இது பெரும்பாலும் மலிவு விலையில் கிடைக்கும் நெய் சுவையின் தனித்துவமானது. ஆனால் நாம் பெரும்பாலும் நெய்யில் கலோரிகள் அதிகம் என்று நினைத்து அதை உட்கொள்வதில் இருந்து விலகி இருக்கிறோம்.

ஆனால் சமையலறையில் நாம் பயன்படுத்தும் மற்ற எண்ணெய்களும் அப்படித்தான். தினசரி வழக்கத்தில் பயன்படுத்தப்படும் கொழுப்புகளுக்கு இது ஒரு நல்ல கூடுதலாக இருந்தாலும், நெய் மிதமானதாக இருக்க வேண்டும் மற்றும் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று மேனன் கூறினார். இது “லாக்டோஸ் இல்லாதது” என்பதால், லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற நபர்களின் உணவில் கொழுப்பின் பிரபலமான தேர்வாக இருக்கிறது என்று அவர் இந்தியன் எக்ஸ்பீரஸிடம் (indianexpress.com) கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Tamil health food ghee benefits for body weight less and others