வெண்டைக்காயில் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் அதிகம். வாரத்திற்கு 2 முறை வெண்டைக்காய் சாப்பிட்டால், அதிக நன்மைகள் உள்ளது. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், இன்சுலின் செயல்பாட்டை சீராக வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. இதில் இருக்கும் பைட்டோ நியூட்ரீயன்ஸ் இவை ரத்த சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராக்கி ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
Advertisment
வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் போலேட் உள்ளது. இவை ஒட்டுமொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள். இதில் உள்ள நார்சத்து ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் குறைய உதவுகிறது. மேலும் நார்சத்து வயிறு நிறையும் தன்மை கொடுக்கிறது. மேலும் உடல் எடையை சீராக வைத்துகொள்ளவும் உதவுகிறது.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள பொட்டாஷியம் ரத்த அழுத்த அளவை குறைக்கிறது. வைட்டமின் ஏ உள்ளதால், நல்ல பார்வையை பாதுகாக்க உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் கண் தொடர்பான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். நல்ல கண் பார்வையை கொடுக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் வெகு சிறப்பான உணவு என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
அதேபோல் வெண்டைக்காயை முழுவதுமாக எண்ணெயில் வேக வைத்து சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் தரும். இதனால் இட்லியை போல் ஆவியில் வேகவைத்து அதன்பிறகு அதை தாளித்து எடுத்தால் சிறப்பான உணவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். ரத்த கொழுப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக எண்ணெயில் வேகவைத்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு ஸ்மோக்கிங் பாயிண்ட் இருக்கிறது. இந்த ஸ்மோகிங் பாயிண்ட் அதிகமானால், பல கெடுகளை உண்டாக்கும். இந்த உணவுகள் ரத்த கொழுப்பை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.