Advertisment

தினமும் காலை உணவுடன் 10 கிராம் வேர்க்கடலை... எவ்ளோ நன்மை இருக்குன்னு பாருங்க!

நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உணவு பொருளான வேர்க்கடலை ஞாபக சக்தி மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தினமும் காலை உணவுடன் 10 கிராம் வேர்க்கடலை... எவ்ளோ நன்மை இருக்குன்னு பாருங்க!

வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் தற்போது ஞாபக மறதி என்ற பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை சந்திக்கும் பெரும்பாலானவர்கள் தங்களின் அண்றாட வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். ஞாபக மறதி பிரச்சினைக்கு தீர்வு தேடி பல மருந்துகளை உட்கொண்டாலும், முழுமையான பலன் தருமா என்பது கேள்வி குறிதான்.

Advertisment

ஆனால் இயற்கையில் கிடைக்கும் வல்லாரை கீரை உள்ளிட்ட சில உணவு பொருட்கள் ஞாபக மறதி பிரச்சினையை விரைவில் சரி செய்யும். அந்த வகையில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உணவு பொருளான வேர்க்கடலை ஞாபக சக்தி மட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

மேலும் சிந்தனை, பகுத்தறிவு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துவதுடன் வயது தொடர்பான மனநலக் கோளாறுகளைத் தடுக்க தினமும் வேர்க்கடலை, சாப்பிடுவது சிறந்த மருத்துவமாக உள்ளது.  பாதாம் பருப்புடன் ஒப்பிடும்போது மலிவானவாக கிடைக்கும் வோக்கடலை பருப்புகளில் காணப்படும் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்ற சிறப்பு கூறுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்கின்றன.

வேர்க்கடலை இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. ஆற்றல் மிக்கவை மட்டுமல்ல, புரதச்சத்து மிகுதியாகவும் உள்ளன. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 4822 சீன பெரியவர்களிடம் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்கு பின், பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான மிங் லி கூறுகையில்,, "ஒரு நாளைக்கு 10 கிராம் (அல்லது இரண்டு தேக்கரண்டி) வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் வயதானவர்கள் தங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை 60 சதவீதம் வரை மேம்படுத்தலாம்

வேர்க்கடலை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும்போது." அவர்கள் வழக்கமாக அனுபவிக்கும் இரண்டு வருட அறிவாற்றல் வீழ்ச்சியை இது திறம்பட தடுக்கிறது என்று கூறியுள்ளார். வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் (ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்) ஒருவரது இதயத்தின் தமனிகளை வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது, இதன் மூலம் இதயத்தை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. காலை உணவின் போது வேர்க்கடலை சாப்பிட்டால் நாள் முழுவதும் நிறைவாக இருக்கும்.

மேலும், வேர்க்கடலை உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும். இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவு வரை சாப்பிட்டால் எல்லாம் நன்றாக இருக்கும். எனவே, அதை அதிகமாக சாப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக வேர்க்கடலை சாப்பிடுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் எடை அதிகரிக்க வழிவகுக்கும் அல்லது ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.

வேர்க்கடலை பருப்புகள் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால், சீரான அளவில் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். டிரிப்டோபன் உங்கள் மனநிலையை நேர்மறையாகவும், மனச்சோர்வைத் தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள எண்ணெயின் அளவு உங்கள் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. வேர்க்கடலையின் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க, அவற்றை சாலட் உடன் சாப்பிடுவது சிறந்த வழியாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Healthy Food Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment