சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்கள் பூண்டு மற்றும் மிளகு. சமையலில் மணம் கொடுப்பது மட்டும் இல்லாமல், உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த 2 பொருட்களையும் வைத்து அருமையாக சாதம் செய்யலாம். எப்படி என்பதை பார்ப்போமா? இந்த சாதம் சுவையாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - ஒரு கப்
நெய் - 2 ஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
முந்திரி ஒரு கைப்பிடி
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
மிளகு சீரகம் தலா ஒரு டீஸ்பூன்உப்பு தேவையான அளவு
செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு பொறிந்தவுடன், அதில் முந்திரி, இடித்த பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பிறகு வடித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, சீரகம் மிளகு இரண்டையும் சேர்த்து பொடி செய்து சாதத்தின் மேல் தூவவும். இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி எடுத்தால் சுவையாக மிளகு சாதம் ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.