உடல் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவு அவசியம். அதிலும் காலை உணவு உடல் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு முக்கிய தேவையாக உள்ளது. இது ஒரு ராஜாவைப் போல சாப்பிட வேண்டும், இதனால் காலை உணவை ஆரோக்கியமான மற்றும் சத்தான பொருட்களுடன் சாப்பிட வேண்டும்.
ஆனால் பெரும்பாலும் பயணத்தின் போது பலராலும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. அதை சரி செய்வதற்கு வாழைப்பழம் பெரிய உணவாக பயன்படுகிறது. வாழைப்பழம் நிச்சயமாக ஆரோக்கிய நன்மைகளுடன் வருகிறது. இதில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியமான இதயத்தை மேம்படுத்துவதற்கும், உடலில் சோர்வைக் குறைப்பதற்கும், இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதற்கும், மனச்சோர்வு, மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் புண்களைக் குறைப்பதற்கும் உடலுக்கு குளிர்ச்சியான விளைவை வழங்குவதற்கும் பயன்படுகிறது.
வாழைப்பழத்தின் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தூண்டி இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான உடலை பராமரிக்க இது ஒரு சிறந்த ஆதாரமாக இருந்தாலும், வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா வேண்டாமா என்பது இன்னும் விவாதமாகத்தான் உள்ளது.

“வாழைப்பழம் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாக உள்ளது. இதுஉடலில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் பசியின்மை குறைக்கிறது. இதனால் ஒருவர் தினமும் வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர், மேக்ரோபயாடிக் டாக்டர் ஷில்பா அரோரா கூறியுள்ளார்.
வாழைப்பழத்தில் உள்ள 25 சதவீத சர்க்கரையானது, நாளின் பல்வேறு செயல்களைச் செய்ய உங்களுக்கு மிகவும் தேவையான சர்க்கரை ரஷ் மற்றும் ஆற்றலைத் தருகிறது. வாழைப்பழத்தில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களில் இரும்பு, டிரிப்டோபன், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி ஆகியவை அடங்கும்.
வாழைப்பழத்தில் வெறும் 89 கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும், இதில் மாங்கனீஸ், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ள பழமாகவும் உள்ளது. அதனால்தான் இது நீரேற்றமாக இருக்கவும் உதவுகிறது. பல்வேறு ஆதாரங்களின்படி, வாழைப்பழங்கள், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்திருந்தாலும், வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல வழி அல்ல.
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன ஆகும்?
ஆற்றலை அதிகரிக்கும் வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவு இயற்கை சர்க்கரைகள் சில மணிநேரங்களுக்குப் பிறகு உங்களை சோர்வாக உணரவைக்கும். வாழைப்பழங்கள் உங்களைத் தூக்கத்தையும் சோர்வையும் தற்காலிகமாக நிரப்புகிறது. இதில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேதத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக, வாழைப்பழத்தை மட்டுமல்ல, அனைத்து பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்போதெல்லாம் இயற்கையான பழங்கள் கிடைப்பது கடினம். நாம் வாங்குவது செயற்கையாக விளைந்தவை, இதனால் காலையில் சாப்பிடக்கூடாது. ரசாயனங்கள் உள்ளதால் இந்த பழங்கள் நாம் நினைப்பதை விட தீங்கு விளைவிக்கும்.
காலையில் வாழைப்பழத்தை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். உங்கள் காலை உணவை ஆரோக்கியமான முறையில் தொடங்க பல்வேறு பொருட்களை கலந்து சாப்பிடுவதன் மூலம் கவனமாக திட்டமிட வேண்டும். எனவே அடுத்த முறை வாழைப்பழத்தை சாப்பிடுவது போல் உணர்ந்தால், அதை மற்ற உணவுகளுடன் சேர்த்துப் சாப்பிடுங்கள். இந்த வழியில் நீங்கள் உடல்நல அபாயத்தையும் தவிர்க்கலாம் மற்றும் ஆரோக்கியமான காலையை தொடங்கலாம். வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளையாகும். வாழைப்பழத்துடன் காலை உணவை எடுத்துக்கொள்ளும்போது கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கிறது.
உங்கள் காலை உணவில் வாழைப்பழங்களை எவ்வாறு சேர்க்கலாம் என்பதற்கான சில வழிகள்
வாழைப்பழ ஓட்ஸ் குக்கீகள்- இந்த கலவை ஆரோக்கியமானது மற்றும் சுவையானது, இது உங்கள் உடலுக்கு எரிபொருள் நிரப்ப உதவும். ஒரு கப் ஓட்ஸ், வாழைப்பழம், பச்சை நட் வெண்ணெய் மற்றும் ஆப்பிள்
பெர்ரி வாழைப்பழ தானியம்- இது மிக விரைவாக வாழைப்பழ காலை உணவாகும், இதை நீங்கள் அதிகம் மெனக்கிடாமல் தயார் செய்யலாம். ஒரு சிறு துண்டு பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் பால் இவை சரியான சுவையைத் தரும்.
சாக்லேட் பனானா ஸ்மூத்தி- காலை உணவுக்கு வரும்போது ஸ்மூத்திகள் ஆரோக்கியமான விருப்பங்களாக உள்ளன. வாழைப்பழம், பருப்புகள் பால் மற்றும் ஒரு கோகோ பவுடர் ஆகியவற்றின் கலவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மென்மையான மற்றும் கிரீமி அமைப்பு சுவையாகவும், நிறைவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமல்லாமல், உங்களை மீண்டும் சாப்பிட தூண்டுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“