/indian-express-tamil/media/media_files/2024/11/19/FCAX1UsMeuUrZwz12gZJ.jpg)
செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும், குறிப்பாக குடலில் வாழும் டிரில்லியன் கணக்கான நுண்ணுயிரிகளின் (பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் போன்றவை) சமநிலையையும் சரியாக இருப்பதை குடல் ஆரோக்கியம் என்பதாகும். இந்த நுண்ணுயிரிகளின் தொகுப்பு குடல் நுண்ணுயிரி (Gut Microbiome) என்று அழைக்கப்படுகிறது.
குடல் ஆரோக்கியம் உங்கள் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான குடல் உணவை திறமையாக உடைத்து, தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்றும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களில் சுமார் 70% குடலில்தான் உள்ளன. ஆரோக்கியமான குடல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளில் பாதுகாக்கிறது.
குடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளதால், குடல் "இரண்டாவது மூளை" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது மனநிலையை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் போன்ற நரம்பியக்கடத்திகளை உற்பத்தி செய்கிறது. எனவே, குடல் ஆரோக்கியம் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றுடன் தொடர்புடையது. அதே சமயம் மோசமான குடல் ஆரோக்கியம் இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
உடலில் குடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து டாக்டர் செல்வ சண்முகம் கூறியுள்ளார். குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியமாக இருக்கவும் பழைய சோறு முக்கிய உணவாக பயன்படுகிறது. முதல் நாள் இரவில் சாதத்தை தண்ணீரில் ஊறவைத்து புளிக்க வைத்து மறுநாள் அதை சாப்பிடும்போது பல நன்மைகள் கிடைக்கிறது என்பது ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த பழைய சோற்றில் இயற்கையாகவே நுண்ணுயிரிகள் அதிகமாக இருக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, குடல் கட்டமைப்பை மீண்டும் உருவாக்கம் செய்ய முடியும். அடுத்து மிக முக்கியமான பானம் மோர். தயிருக்கும் மோருக்கும் வித்தியாசம் இருக்கிறது. தயிர் உருவானபிறகு அதில் தண்ணீர் விட்டு கடைந்து வெண்ணெய் எடுத்தபிறகு கிடைக்கும் மோரில், அதிக ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. 3-வது ஆரொகட் கிழங்கு. மஞ்சள் போன்று காட்சியளிக்கும் இந்த கிழங்கு, இதில் இருந்து கிடைக்கும் மாவை வைத்து கஞ்சி செய்து குடிக்கலாம்.
இந்த 3 உணவுகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது கெட்டுப்போன குடலையும் சுத்தம் செய்யலாம் என்று டாக்டர் செல்வ சண்முகம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.