மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு வகையான நோய் தாக்கங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மனிதனின் சராசரி ஆயுட்காலம் குறைந்துகொண்டே வரும் நிலையில், உயிரிரை காப்பாற்றிக்கொள்ள தற்போது பலரும் இயற்கை மருத்துவத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக சமூகலைதளங்களில் இயற்கை மூலிகைகளின் நன்மைகள் குறித்து விளக்கும் பதிவுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ‘
சாதாரணமான நாம் வீட்டில் தினமும் சாப்படும் சாப்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், இன்றைய கால உணவுகளில், சத்துக்கள் இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அதே சமயம், இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை நம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, ஆற்றல் அதிகரித்து நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். அந்த வகையில் ஒரு உணவு தான் பூண்டு.
நம் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக மலைப்பூண்டை விட சின்ன பூண்டை நம் உணவில் சேர்த்துக்கொண்வது நல்லது. தினசரி உணவில் 3-6 பூண்டுகளை சேர்த்துக்கொண்டே வரும்போது, உடல் எடை குறைவு, ரத்த கொழுப்பு கூடாது, ரத்த கொதிப்பு வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் இருக்கும் நுன் கிருமிகள் அழியும். உடலில் உள்ள நுன் கிருமிகள் வளராமல் தடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் பூண்டுக்கு உண்டு. ஆண்மையை அதிகரிக்கும் பூண்டு பெரிய நன்மை செய்யும். இதனால் எப்போதுமே நமது தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய நன்மையை தருவதாக அமையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“