இந்த இலையுடன் 5 மிளகு சேர்த்து இடித்து... சளி- இருமலுக்கு டாப் தீர்வு: டாக்டர் கார்த்திகேயன்
அதிகமான ஈரப்பதம் இருந்தாலே கற்பூரவள்ளி வளரும். அதுவும் இந்த செடி வளர சரியான இடம் இந்தியா தான். இந்த செடியின் தண்டு மற்றும் இலைப்பகுதியில் தண்ணீர் அதிகம் உள்ளது,
மழை மற்றும் பனி காலத்தில் நாம் அதிகம் சந்திக்கும் முக்கிய உடல் நல பிரச்னை ஜலதோஷம், சளி, இருமல். இதனை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும், பல முயற்சிகளை செய்கிறோம். இந்த பிரச்னைக்கு நம் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்தே தீர்வு காணலாம். அதேபோல், இயற்கையில் கிடைக்கும் மூலிகை செடிகளை வைத்தும் குணப்படுத்தலாம். அந்த வகையிலான ஒரு மூலிகை தான் கற்பூரவள்ளி.
Advertisment
இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது வீடியோவில் கூறுகையில், கற்பூரவள்ளி இலைகள் நமக்கு அருமையான ஒரு கை வைத்தியம். தொண்டை வலி இருமல், ஆகிய பிரச்னைகளை தீர்க்கும். கற்பூரவள்ளி செடி எளிமையான வீட்டிலேயே வளர்க்கலாம். அதிகமான ஈரப்பதம் இருந்தாலே கற்பூரவள்ளி வளரும். அதுவும் இந்த செடி வளர சரியான இடம் இந்தியா தான். இந்த செடியின் தண்டு மற்றும் இலைப்பகுதியில் தண்ணீர் அதிகம் உள்ளது,
துளசியுடன் ஒப்பிடும்போது கற்பூரவள்ளியில் தான் அதிகமான சத்துக்கள் இருக்கிறது. இதில் இருந்த வெளியாகும் நறுமணம் கொசுவை விரட்டும் சக்தி கொண்டது. உடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடும் குணம் கற்பூரவள்ளிக்கு உண்டு. சுருங்கி இருக்கும் நுரையீரல் குழாய்கனை விரிவடைய செய்யும் திறன் கொண்டது. ஜீரணம் தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும். வாயு தொல்லைக்கு எதிராகவும் கற்பூரவள்ளி சிறந்த தீர்வை கொடுக்கும்.
Advertisment
Advertisements
4-5 மிளகு, 3 கற்பூரவள்ளி இலைகள், இரண்டையும் உரலில் போட்டு இடித்து, தனியாக எடுத்து அதில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டு வந்தால், இருமல், சளி விரைவில் குணமாகும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.