கேன்சரை தடுக்கும் துத்தநாகம்... இதுல ரொம்ப அதிகம்; இப்படி கடையல் செஞ்சு சாப்பிடுங்க: டாக்டர் சிவராமன்
தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அது எந்த கீரையாக இருந்தாலும் சரி. அரைக்கீரை, புளிச்சக்கீரை என எதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அது எந்த கீரையாக இருந்தாலும் சரி. அரைக்கீரை, புளிச்சக்கீரை என எதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இரும்புச்சத்து உட்பட உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் கீரைகளை, உணவில் சேர்த்துக்கொள்ள தவறிவிட கூடாது. ஒவ்வொரு கீரையும் நமக்கு பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பெரும்பாலும் கீரைகள் நமக்கு சாதாரணமாக கடைகளில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் நாம் வீட்டிலேயே வளர்க்கவும் செய்யலாம்.
Advertisment
கீரைகளை கடைந்து, பொறியல் செய்து சாப்பிடுவது போன்று பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்து செய்து சாப்பிடலாம். அனைத்து கீரைகளையும் நம் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் வெந்தய கீரை இதில் மிகவும் ஸ்பெஷல் என்று சொல்லலாம். கீரைகளில் மட்டும் தான் துத்தநாகம் என்ற ஜிங்க் சத்து அதிகமாக இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் அனைவரும் ஜிங்கோவிட் மாத்திரை சாப்பிட்டிருப்போம். அதே சமயம் இயற்கையாகவே துத்தநாகம் என்ற ஜிங்க் இருப்பது 2 பொருட்களில் மட்டும் தான். அதில் ஒன்று நிலக்கடலை மற்றொன்று கீரைகள். இந்த துத்தநாகம் தான் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் புற்றுநோய்யை தடுக்கும்.
இதனால் தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அது எந்த கீரையாக இருந்தாலும் சரி. அரைக்கீரை, புளிச்சக்கீரை என எதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
வெந்தய கீரை பருப்பு குழம்பு எப்படி செய்வது?
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
பருப்பு
தக்காளி
சீரகம்
மஞ்சள் தூள்
வெங்காயம்
கடுகு, மிளகாய்
எண்ணெய்
பெருங்காயப்பொடி
வெந்தய கீரை
செய்முறை
முதலில், பருப்பு, சீரகம், தக்காளி, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு பாணில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், சேர்த்து தாளித்து, அதில் வெந்தய கீரை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இறுதியாக கடைந்த பருப்பை அதில் சேர்த்து கொதிக்க வைத்தால் சுவையான வெந்தயகீரை பருப்பு குழம்பு தயார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.