தற்போதைய காலக்கட்டத்தில், உணவு பழக்கங்கள் மாறி வருவதால், பெயர் சொல்ல முடியாத புதிய புதிய நோய்களை நாளுக்கு நாள் சந்தித்து வருகிறோம். ஒரு பக்கம், இந்த நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தாலும், மறுபக்கம், இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை வைத்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றனர்.
Advertisment
அந்த வகையில், உடலுக்கு ஆண்டி ஆக்ஸிடன்ட் தேவையை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றவாறு உணவுகளை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் டாக்டர் அருண்குமார், ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், எந்தெந்த பொருட்களில் எவ்வளவு ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது என்பது குறித்து கூறியுள்ளார். அதன்படி, கிரீன் டீயில் 1.5 மில்லிமோல், பில்டர் காபியில் 3 மில்லிமோல், பிளாக் காபியின் ஆண்ட் ஆக்ஸிடன்ட் லெவல் 15 மில்லி மோல் இருக்கிறது.
நாம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் இஞ்சியின் ஆண்டி ஆஸிடன்ட் லெவல், 20 மில்லி மோல், இவை அனைத்தையும் விட, நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய புதினாவில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிட்ண்ட் வெலவ் 115 மில்லிமோல். அதேபோல் நெல்லிக்காயில் 246 மில்லிமோல் இருக்கிறது. இதில் அனைத்து பொருட்களுமே நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியது தான் என்றாலும், புதினா மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டும், நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.