உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக மூட்டு வலி என்பது இருக்கும். அதேபோல் வயது ஆக ஆக, எலும்புகளில் பலம் குறைந்து மூட்டுவலி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி மூட்டு வலிகளை சந்திப்பவர்கள், அதை எளிமையாக எதிர்கொண்டு, தீர்வு காண்பதற்கான மூலிகை நமக்கு எளிமையாக கிடைக்கும் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
அந்த மூலிகை பிரண்டை. பிரண்டை சாப்பிடுவதால் கால்சியம் சத்து கிடைக்கும். எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கும். பிரண்டை கீரை துவையல் செய்து சாப்பாட்டில் போட்டு சாப்பிட வேண்டும். பிரண்டை கீரைக்கு தமிழில் மற்றொரு பெயர் உண்டு வஜ்ரவல்லி என்று கூறப்படும். வஜ்ரம் என்றால் வலுவான, உறுதி என்று அர்த்தம். அதனால் இந்த கீரை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
பிரண்டையில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது. இவை அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியதாகவும் உள்ளன. இந்த அற்புத மூலிகையை துவையல் செய்து சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். அவ்வகையில், பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஞாபகசக்தியை பெருக்குகிறது.
Advertisment
Advertisements
மூளை நரம்புகளை பலப்படுத்துகிறது. எலும்புகளுக்கு சக்தி தருகிறது. மற்றும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்குகிறது. இவற்றை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் மற்றும் உடல் வனப்பும் பெறும். அதேபோல் பிரண்டையை ஊறுகாயாக எடுத்துக்கொள்ளலாம். வெறும் கஞ்சியை வைத்துக்கொண்டு, அதனுடன் பிரண்டை ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும். உடல் மூட்டு வலி பறந்து போகும் என்று பிரபல செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.