scorecardresearch

ஆப்பிள், கேரட், பாதாம்… சுகர் வரும் முன் காக்கும் உணவுகளை தெரிஞ்சுக்கோங்க!

பழங்களில், ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவற்றில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன.

ஆப்பிள், கேரட், பாதாம்… சுகர் வரும் முன் காக்கும் உணவுகளை தெரிஞ்சுக்கோங்க!

உணவே மருந்து என்ற முன்னோர்களின் கூற்றுப்படி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உடல் ஆரோக்கியத்திற்கும், நமது உடலில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. சத்தான உணவை எடுத்துக்கொள்ளும்போது நமது, உடலும் ஆரோக்கியமானதாக இருக்கும். அதேபோல் சில உணவுகளை நாம் எடுத்துகொள்ளும்போது நமது உடல் பெரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில், அதிகமான மக்கள் தங்கள் உடல்நலம் மற்றும் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தீர்மானித்து சரியான முறையில் எடுத்துக்கொள்வதால், செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பல உணவுகளை பற்றி தெரிந்துகொள்கின்றனர். ஒரு நபரின் உடல் நலத்திற்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை பலரும் அறிந்திருப்பதால் எந்த எடுத்தக்கொள்ள வேண்டிய உணவுகளை சரியாக தேர்வு செய்கின்றனர்.  

ஊட்டச்சத்து நிபுணரான பக்தி கபூரின் கூற்றுப்படி, பாலிபினால்கள் – ஒரு காலத்தில் வெறுமனே ஒரு வகை ஆக்ஸிஜனேற்றம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது “நுண்ணுயிரிகளுக்கு ப்ரீபயாடிக் உணவை வழங்குவதாக அறியப்படுகிறது”. இது தொடர்பான அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நுண்ணுயிர் அறிவியலில் மிக சமீபத்திய முன்னேற்றங்களில் ஒன்று “பாலிபினால்களின் பங்கை வெளிப்படுத்துதல்” என்று பதிவிட்டுள்ளார்.

பாலிபினால்கள் என்றால் என்ன?

பாலிபினால்கள் “தாவர சேர்மங்களின் ஒரு வகை” என்று ஹெல்த்கேர்.கம் (healthcare.com) வரையறுக்கிறது, அதன் வழக்கமான நுகர்வு “செரிமானம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும், அத்துடன் இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கும்”. இதற்கு சிவப்பு ஒயின், டார்க் சாக்லேட், தேநீர் மற்றும் பெர்ரி ஆகியவை சிறந்த அறியப்பட்ட ஆதாரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பாலிபினால்கள் மற்றும் குடல் நுண்ணுயிரிகளுக்கு இடையிலான உறவு பற்றிய டஜன் கணக்கான ஆய்வுகளை” மதிப்பாய்வு செய்த பின்னர், விஞ்ஞானிகள் இப்போது சிறந்த குடல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு பாலிபினால் நிறைந்த உணவுகளை வழக்கமாக உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலா, தேநீர், டார்க் சாக்லேட் மற்றும் ஒயின் ஆகியவை பாலிபினால்கள் அதிகம் அடங்கியுள்ள உணவுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படும் திறனைக் கொண்டுள்ளன, அதாவது, உங்கள் செல்களை சேதப்படுத்தும் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன” என்று கபூர் கூறியுள்ளார்.

மேலும் பாலிபினால்கள் வீக்கத்தையும் குறைக்கின்றன , மற்றும் நீரிழிவு, முடக்கு வாதம் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்களைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் உதவுகிறது. இது குறித்து மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை உட்சுரப்பியல் நிபுணரின் ஆலோசகர் டாக்டர் அர்ச்சனா ஜுனேஜா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், (indianexpress.com)

பாலிபினால்கள் குடல் நுண்ணுயிரியை சாதகமாக பாதிக்கிறதுஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களின் விளைவுகளை குறைக்கின்றன, இதன் மூலம் முறையான அழற்சி மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கின்றன. இதனால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய-வாஸ்குலர் நோய்கள் போன்ற வாழ்க்கை முறை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன, ”என்று கூறியுள்ளார்.

அர்பன் பிளாட்டர், ஊட்டச்சத்து நிபுணர் ரீமா கிஞ்சல்கர், கூறுகையில், பாலிபினால்கள் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன, அவற்றின் “வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள்” வீக்கத்தைக் குறைக்கின்றன, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. அவை இரத்த உறைவு உருவாகும் அபாயத்தையும் குறைக்கின்றன. “பாலிபினால்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன, குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும், வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க காரணிகளாகும்,” என்று கூறியள்ளார்.

கபூர் கூறியுள்ள பாலிபினால்களின் 8 நன்மைகள்

வீக்கத்தைக் குறைக்கும்

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன

குடல் நுண்ணுயிரிக்கு உணவளிக்கின்றன

மூளை ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கின்றன

நல்ல குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன

புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன

உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன

பழங்களில், ஆப்பிள், திராட்சை, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவற்றில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன, காய்கறிகள், கேரட், ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, கீரை போன்றவற்றில் நல்ல ஆதாரங்கள் உள்ளன. பருப்புகள் மற்றும் விதைகளில், பாதாம், ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Tamil health polyphenols how to protect against heart disease type 2 diabetes